பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மக்கள் தீர்ப்பு


தம்பி, அடிக்கடி பேசும், 'பொதுஜன சேவைகளில் இதுவொன்று என்றுதான் அண்ணன் முதலில் எண்ணினான் - அலட்சியப்படுத்தினான். தம்பியோ விடவில்லை - அண்ணனிடம் மட்டுமல்ல, ஊரிலே பலரிடம், தன் திட்டத்தால் ஏற்படக்கூடிய நன்மைகளைப்பற்றி விளக்கிக்கொண்டிருந்தான்.

தம்பியின் ’பொதுஜன சேவை'யை அண்ணன் அலட்சியமாகக் கருதுகிறான் என்பதறியாத சிலர், அண்ணனிடம், புதுத் திட்டத்தைப் புகழ்ந்து பேசினர் - அவர் மகிழ்வார் என்று எண்ணிக்கொண்டு! அண்ணன் அவர்கள், தன்னை மகிழ்விக்கத்தான் அவ்விதம் புகழ்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல், வழக்கப்படி, 'பொதுஜனம்’ மனதைப் பறிகொடுத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு, புதிய திட்டத்தைப் பழித்துப் பேசினாலோ, அலட்சியப் படுத்தினாலோ, அதிலே அக்கரை கட்டாவிட்டாலோ, தன்மீது கோபிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு, நல்ல திட்டந்தான் என்று சொல்லிவைத்தான். ஆக, ஊரிலே மெள்ள மெள்ள புதிய திட்டத்துக்கு ஆதரவு திரண்டது.

பிறகு புதிய திட்டத்தில், அண்ணனுக்கு உண்மையாகவே ஆசை ஏற்பட்டது -- வேறோர் காரணத்தால்.

குளிக்குமிடம் அமைக்க, தம்பி குறிப்பிட்ட இடத்தைக் கவனித்தபோது, அதை அடுத்து, ஏராளமான புறம்போக்கு நிலம் இருந்திடக் கண்டான். புதிய யோசனை உண்டாயிற்று.

குளிக்குமிடம் அமைக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு உள்ளூர் மக்கள் வரத் தொடங்குவர், மதிப்பு உயரும்; அப்போது அதையடுத்துள்ள புறம்போக்கு நிலத்