பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மக்கள் தீர்ப்பு


உள்ளூர் பத்திரிகையின் புகழுரை, நகரசபையின் அங்கீகாரம், அண்ணனின் ஆதரவு, இவ்வளவும், புதிய திட்டத்துக்குக் கிடைத்த சந்தோஷத்தால், மெய்மறந்து இருந்தான் டாக்டர். அண்ணன் புதிய திட்டத்தினால், தனக்கு மொத்தத்திலே, எவ்வளவு இலாபம் கிடைக்கக்கூடும் என்பதைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தான்.

வீடுகளிலே குடியிருப்போர் சங்கம் ஒன்று அவ்வூரில் அதற்கோர் தலைவன். தீப்பொறி பறக்கப் பேசுபவன் - ஏழைகளின் சார்பில். வரி செலுத்துவோர் ஏழைகள், ஆகவே அவர்களின் நன்மையைக் கவனிப்பதையே நகரசபை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும், என்பது, அவன் முழக்கம். தவறானதல்ல. அவனுக்கும் புதிய திட்டத்திலே, அக்கரை ஏற்பட்டது -- ஆதரித்தான். குளிக்குமிடம் அமைக்கப்பட்டு, அது செல்வாக்குப் பெற்று, வெளியூர் மக்கள் அதிகமாக அங்கு வந்து போகத் தொடங்கினால், நகர சபைக்குப் பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும் -- நகர சபையின் வருமானம் அதிகரித்தால், நகரசபை, உள்ளூர் பொதுமக்களிடம் வசூலிக்கும் வரியைக்கூட குறைக்கும். இதனால் ஏழைகளுக்கு நன்மை உண்டாகும் என்று கூறினான் -- ஏழை பங்காளன் என்ற பட்டத்துக்குரியவனாவதற்குத் தன்னை தயாரித்துக்கொண்ட, குடியிருப்போர் சங்கத் தலைவன், புதிய திட்டம், ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம், என்று எண்ணினான் -- புதிய திட்டத்தை ஆதரித்தான். டாக்டரின் களிப்பு பூர்த்தியாயிற்று.

குளிக்குமிடம் கட்டுவதற்கு, பெருந்தொகையொன்று, முனிசிபல் சபையினர் குறித்தனர். பலருக்குப் பல வேலைகள், காண்ட்ராக்ட்டுக்குத் தரப்பட்டன. மரச் சாமான்கள் சப்ளை செய்ய, மார்க்கசகாயம் - சுண்ணாம்புக்கும் செங்கல்