பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

13


லுக்கும் சேஷாசலம் -- பிளான்படி, கட்டடத்தை அமைக்க கங்காதரம் -- இப்படிப் பலருக்குக் கிடைத்தது. இந்தக் காண்ட்ராக்ட்டுகளிலே, சிலவற்றிலே, அண்ணனுக்குத் தொடர்பு உண்டு - வெளியே தெரியாது; சிலவற்றிலே, பணம் கடன் கொடுப்பதன்மூலம் தொடர்பு ஏற்பட்டது. மொத்தத்திலே, புதிய திட்டத்திற்காகச் செலவிடப்படும் பெரும் பணத்திலே, குறிப்பிடக்கூடிய தொகை, அவருக்கு வந்து சேரும்படி, தந்திரமாக ஏற்பாடு செய்துகொண்டார். அவர்மட்டுமல்ல; அவர்போன்ற, பல பணந்தேடி.களுந்தான்!

டாக்டருக்கு, இவை ஒன்றும் தெரியாது. ஒரே மகிழ்ச்சி மயம். மேலும் மேலும் ஆராய்ச்சிகள், நடத்திய வண்ணம் இருந்தார் -- புதிய திட்டத்துக்கு பலம் தரத்தக்க வகையான ஆராய்ச்சிகள்.

உள்ளூர் பத்திரிகையின் உரிமையாளர், ஒரு மாஜி தீவிரவாதீ -- புரட்சிக்காரராகவும் இருந்தவர். அடக்குமுறைகளை எதிர்த்தவர் -- ஆதிக்கக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்கத் தன்னைத்தானே அர்ப்பணித்தவராக இருந்தவர் -- பிறகோ -- தீவிரவாதக் கோலத்தைக் கலைத்துவிட்டு, பத்திரிகை துவக்கினார் -- தன் பேனா புரட்சி எழுத்துக்களையே தீட்டும் என்று எண்ணி வேறோர் எழுத்தாளரை, ஆசிரியராக அமர்த்தினார் -- நிர்வாகத்தையே, கண்ணுங் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார். நல்ல விளம்பரம் நல்ல வருவாய்!

பத்திரிகைக்கு ஆசிரியராக அமர்ந்தவர், ஒரு பெரிய புரட்சி வீரரிடம் தான் தயாராவதாக எண்ணிக்கொண்டு மகிழ்ந்தார். தீவிரவாதியானார். பொதுஜன நன்மையை ஆதரிப்பதே என் குறிக்கோள் - அதற்கு எதிரிடையாக எது வரினும், குறிக்கிடினும், அச்சம் தயை தாட்சண்யமின்றிக்