பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மக்கள் தீர்ப்பு


கண்டிப்பேன், என்று கூறினார். அவ்வப்போதுமட்டும், பத்திரிகை உரிமையாளர், ஆசிரியருக்கு, வாழ்க்கைச் சிக்கல்களைப்பற்றி உபதேசம் செய்வார் -- தீவிரமாகத்தான் எழுத வேண்டும், ஆனால், அதேபோது, வாழ்க்கையையும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று குத்தலாகப் பேசுவார் - தீப்பொறி பறக்கத்தான் எழுதவேண்டும், ஆனால் அந்தப் பொறிகள் பத்திரிகையையே தீய்த்துவிடக்கூட்டாது. தம்பீ, பத்திரிகை என்னுடையது -- எனக்குக் குடும்பம் உண்டு, அவர்களுக்கு உணவு, உன் உணர்ச்சி தரும் எழுத்துக்களல்ல! -- என்று கிண்டலாகப் பேசுவார். சிலசமயங்களில், உரிமையாளருக்கும் எழுத்தாளருக்கும் கருத்துவேற்றுமை உண்டாகும். -- வெற்றி, உரிமையாளருக்கு, விசாரம், எழுத்தாளருக்கு!

ஆனால், குளிக்குமிடம் அமைக்கும் திட்டத்தைப்பற்றியோ இருவருக்கும் ஒரே கருத்து. ஆசிரியருக்கு மகிழ்ச்சி. மெள்ள மெள்ள உரிமையாளரைத் தன் வழிக்குக் கொண்டு வந்துவிட்டதாக எண்ணினார் -- அவர் அறியார், உரிமையாளர், காண்ட்ராக்டர் யோசனைப்படி, புறம்போக்கு நிலத்திலே ஒரு பகுதிக்கு, உரிமையாளர் ஆகிவிட்ட இரகசியம்!

பொதுவாகப் பார்க்கும்போது, அந்தச் சிற்றூர் முழுதும், சிறந்த திட்டம், சிலாக்கியமான திட்டம், என்று புகழ்ந்தது, டாக்டரின் திட்டத்தை. பொதுஜன ஆதரவு இவ்வளவு தெளிவாகவும் உருவாகவும், மகத்தான அளவிலும், தனக்குக் கிடைத்ததை எண்ணி டாக்டர் களித்தார் -- தமது திட்டத்தை மேலும் மேலும் ஆராயத் தொடங்கினார். ஒரு சந்தேகம் வந்துதித்தது.

கடலோரக் குனிக்குமிடத்திலே உள்ள தண்ணீர், சிலாக்கியமானது தானா என்பதுபற்றி, தான் நடத்திப்