பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மக்கள் தீர்ப்பு


கொண்டாய். நோட்டுகளை, எண்ணிக் கொடுத்தேன், அதற்கான செலவுக்கு! இவ்வளவுக்குப் பிறகு, நீ யோசனை கூறுகிறாய், திட்டத்தைக் கைவிட்டு விடலாம் என்று! துளியாவது பணத்தின் அருமை பெருமை தெரிந்தால் இப்படி நடந்துகொள்வாயா?" என்று கடிந்துரைத்தான் அண்ணன். தம்பி தத்தளித்தான் -- தன்னால் இவ்வளவு தொல்லை அண்ணனுக்கு ஏற்பட்டுவிட்டதே என்பதை எண்ணி மட்டுமல்ல -- பொதுமக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட திட்டத்துக்கு ஆதரவு தா, நகராடசி மன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டார்களாமே, ஆளுக்கு ஆயிரம் -- இப்படியா பொதுஜன சேவை இருக்கிறது! -- என்பதை எண்ணி. இப்படிப் பட்டவர்களை ஏன் பொதுமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்? எப்படி இவர்களின் கபடம் வெளியே தெரியாமலிருந்து விடுகிறது? - என்றெல்லாம் எண்ணி அயாசமுற்றான். அண்ணன் சில விநாடிகள் ஆழ்ந்த யோசனையிலிருந்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவனாகி, தம்பியைப் பார்த்து, “சரி -- இதுவரையில் தான் புத்தியில்லாமல நடந்துவந்தாய் -- இனி யாவது ஒழுங்காக நட. உன் புதிய ’ஆராய்ச்சியை’, மனதோடு வைத்துக்கொள் -- வெளியே கொட்டி ஊரைக் கலக்காதே" என்றான். தம்பிக்குத் திகில் பிறந்தது. "திட்டப்படி காரியம் நடந்துவிடட்டும்" என்றான் அண்ணன். மிதித்தவன் போலானான் தப்பி. "என்ன, என்ன! திட்டப்படி காரியம் நடப்பதா என்ன அண்ணா! மக்களைச் சாகடிப்பதா! நாட்டைச் சுடுகாடு ஆக்கவதா! நானா! என்ன துணிவு உனக்கு! எவ்வளவு கல், நெஞ்சம்" என்று கூவினான். திட்டம் நிறைவேற்றப்பட்டாகவேண்டும் -- இனி அதை நிறுத்த முடியாது -- இலட்சக் கணக்கில நஷ்டம் ஏற்படும் -- இந்தத் திட்டத்தை நம்பித் தனவந்தர்கள் ஏராளமான ’முதல்’ போட்டுவிட்டார்கள் - திட்டத்தை நிறுத்திவிட்டால் பெரு