பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

21


கஷ்டம் ஏற்படும் - எனக்கேகூடப் பெரு நஷ்டம் உண்டாகும்"

”அதற்காக மக்களைச் சாகடிக்கும் மாபாதகம் புரிவதோ

"மாபாதகமோ - வெறும் பாதகமோ, எனக்குத் தெரியாது. நீ முதலிலே சொன்னபடி பல கட்டடம் கட்டியாக வேண்டும்"

”அண்ணா! நச்சுப் பொய்கையை நாம் வெட்டுவதா, நமது மக்களைச் சாகடிக்க!'

"நம்பினவர்களின் பணம், பாழாவதா? நடுவிலே திட்டத்தைத் தகர்த்துவிட்டால், நஷ்டம்தானே ஏற்படும். உன்னைச் சுமமா விடமாட்டார்கள்"

'பணம் செலவிட்டீர்கள், சரி - அதற்காக மக்கள் பிணங்களாவதா? என் அவசர புத்தியினால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. பண நஷ்டம். அதைத் தடுப்பதற்காக, மக்களை மடியச் செய்வதா? பொதுமக்களைப் பூச்சி புழுவென்று எண்ணிக்கொண்டீரோ! பேசாமல் எழுந்து போய்விடும் மரியாதையாக.”

"மடத்தனத்தை விடு. திட்டத்தை முறைப்படி நிறை வேற்றிவிடுவோம் பிறகு, பொதுமக்கள் சாகாதபடி தடுத்துக்கொள்ளலாம்"

'பிறகு தடுப்பதா? பிறகு? எப்படி?"

"குளிக்குமிடம் கட்டி முடித்துவிட்டு, திறப்பு விழா நடந்தேறிய பிறகு....."

'மக்கள் நோயால் தாக்கப்பட்டு மடியும்போது...'

"மடிவதற்கு முன்பு நாமே பெரியதோர் வைத்ய