பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

23


கான 'தூபம்' போடுவது என்று தீர்மானித்துவிட்டேன். வீணாக நாசமாகாதே. திட்டத்தைத் தகர்க்காதே -- நீ தகர்ந்து போவாய் -- உனக்கும் பொதுமக்களுக்கும் உள்ள தொடர்பு, நேசம், தகர்ந்து போகும் -- தானாக அல்ல -- எங்கள் தாக்குதலால்!' நான், அடிக்கடி கூறி வந்தததை மீண்டும் கவனப்படுத்துகிறேன் -- 'பொது ஜனத்தை' ஆட்டி வைக்க முடியும் -- எப்படிவேண்டுமானாலும்" என்றான்.

"தலையாட்டிப் பொழுமைகளல்ல, பொதுமக்கள்! போய்க் கூறுவோம், வா, இருவரும் -- மரணத்தை ஏவுகிற நீயும், மக்களின் வாழ்வு வளமாகவேண்டும் என்று எண்ணுகிற நானும் -- இருவரும் சென்று பேசுவோம், பொதுமக்களிடம் -- வா, தைரியமிருந்தால் -- வா, வல்லமை இருந்தால்! வந்து பேசு -- பிறகு பார், யாரைப் பொதுமக்கள், பொதுஜன விரோதி என்று கூறுகிறார்கள் - கண்டிக்கிறார்கள், என்பதை. வரத் தயாரா? நான், திட்டத்தால் வரக் கூடிய நாசத்தை எடுத்து விளக்கிப் பேசுகிறேன். நீ அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டால் சிமான்கள் சிலருக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை எடுத்துக் கூறு - கற்களால் அடித்து விரட்டுவர், உன்னை" என்று டாக்டர் ஆகரோஷத்துடன் பேசினார். அண்ணன், அவனைச் சுட்டுத் தள்ளிவிடுவது போன்றவிதமாக, முறைத்துப் பார்த்துவிட்டு, சரேலெனப் போய்விட்டான். போர் மூண்டுவிட்டது!!

***

"இனிக் காலதாமதம் கூடாது - உண்மையை உடனே ஊரறியச் செய்யவேண்டும் -- சீமான்களின் சதிச் செயல் ஆரம்பமாகு முன்பு, பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி விடவேண்டும். பொதுமக்கள் அறிவர், நமது தொண்டு எப்படிப்பட்டது என்பதை. சீமான்களின் போக்கும் அவர்க