பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மக்கள் தீர்ப்பு


ளுக்குத் தெரியும். சீறினான் அண்ணன், பணம் நஷ்டமாகுமே என்பதால். ஆனால், என்ன செய்துவிடமுடியும்! பொதுமக்கள், என்ன, உண்மையைத் தெரிந்துகொள்ள முடியாதவர்களா? மக்களாட்சிக் காலம் இது! மயக்கும் புரோகிதனும், மிரட்டும் மன்னனும் ஒழிந்துபோய், மக்களுக்காக, மக்களால் அமைக்கப்பட்ட, மக்களாட்சி நடக்கும் காலம். இதிலே மமதையாளர்களின் ஆர்ப்பரிப்பு தவிடு பொடியாகும். மக்கள், முதலில் உண்மையை உணரவேண்டும். இந்தக் கட்டுரை, மக்களுக்கு முழு உண்மையை உணர்த்துவிக்கும். விளக்கமாகத் தீட்டி யிருக்கிறேன். மூன்றுமுறை நானே படித்தேன். ஆதாரங்கள் ஏராளம். ஆராய்ச்சியாளரின் கருத்தை வெளியிட்டிருக்கிறேன். இதைக் கண்டால், மக்கள் உண்மையை உணர்வர். இன்றே பத்திரிகையில் வெளிவந்தாகவேண்டும்."

டாக்டர், கட்டுரையைத் தீட்டிய பிறகு இதுபோல எண்ணினார். ஓட்டம், பெருநடையாகச சென்றார், பத்திரிகை அலுவலகத்திற்கு. ஆசிரியரிடம் விஷயத்தை விளக்கினார் டாக்டர். குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் தக்க பதிலளித்தார். கட்டுரையைப் படித்துக் காட்டினார். ஆசிரியரின் கண்களிலே நீர்த்திவலைகள்!! எழுந்து வநது, டாக்டரைக்கட்டி அணைத்துக்கொண்டு, "டாக்டர்! நீர் மேதை. பரோபகாரி! சிலை நாட்டிச் சிறப்பிக்கவேண்டும் உம்மை பொதுமக்கள், உம்மை, 'ரட்சகர்' என்று போற்றப்போவது திண்ணம். எவ்வளவு பெரிய ஆபத்தை, நாசத்தைத் தடுத்து விட்டீர் தெரியுமா! உம்மால உமது பெருமையைப் பூரணமாக உணர்த்துகொள்ளமுடியாது. என் போன்றவர்களால் மட்டுமே முடியும்! டாகடர்! நான், தங்கள் தோழனாக இருப்பதைப் பெரியதோர் பாககியம் என்றே கருதுகிறேன். இந்த நூற்றாண்டின் 'மகாபுருஷர்' தாங்கள் என்று முகஸ்