பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மக்கள் தீர்ப்பு


'அவ்வளவு அலட்சியமாகவா, ஒரு எழுத்தாளனைப் பேசுகிறீர் -- இந்தச் சீமானின் பேச்சைக் கேட்டுக்கொண்டு. தாங்களும் ஒரு எழுத்தாளர் --

"முன்பு! இப்போது, இந்தப் பத்திரிகையின் இலாப நஷ்டத்துக்குப் பொறுப்பு என்னுடையது. டாகடரின் கட்டுரை வெளிவந்தால், நகராட்சி மனறத்தினர், மான நஷ்ட வழக்குத் தொடுப்பார்கள் -- என்று இவர் கூறுகிறார் -- தெரிகிறதா -- உன் எழுத்துக்களை எண்ணிக்கொடுத்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -- பணம் கொட்டித் தரவேண்டும், வழக்கு அவர்கள் தொடுத்தால்.

'"பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி வழக்கு நடத்தியே பார்க்கலாம்.

"இதை ஏற்றுக்கொள்ளும் இடமாகப் பார்த்து, நீர் ஆசிரியர் வேலை பார்க்கலாம் போய் வாரும். இன்றுமுதல் பச்சைமலை ஆசிரியராக நியமிக்கப்படுவார்."

***

வேலை இழந்த ஆசிரியரும், டாக்டரும் சந்தித்தனர் -- வீரத்தை விட மறுத்தனர் இருவரும் -- வேல்பாய்ந்த வேழமாயினர். வேறு இதழ்கள் இல்லை. வேதனை, டாசடருக்கு. உண்மை, மறைக்கப்படுகிறதே என்று துடித்தார், அவருடைய இதயத்தை மேலும் குத்துவதுபோல, அன்றைய இதழில், திட்டத்தின் சிறப்புகளைப் பற்றி அவர் முன்பு தீட்டிய கட்டுரை, மீண்டும் பிரசுரிக்கப்பட்டிருந்தது; இதழைச் சுக்குநூறாகக் கிழித்தெறிந்தார். மேஜையைக் குத்தினார்; கை வலித்தது நாற்காலிகளைப் போருக்கழைத்தார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார், பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், அவர்களைத் தள்ளிக் கொல்