பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மக்கள் தீர்ப்பு


"அப்பா! அவர் வந்திருக்கிறார்" -- என்று தழதழத்த குரலில் கூறினாள், டாக்டரின ஒரே மகள்.

"யார் -- ஏன்" -- என்று வெறுப்புடன் கேட்டார் டாக்டர்.

”அவர் தானப்பா! இன்றுதான் கப்பல் வந்தது" என்றாள் காரிகை. "ஒஹோ! உன் நண்பனா...காதலன் வந்திருக்கிறானா..சரி கண்ணே! நான் சஞ்சலத்திலே இருக்கிறேன், ஆகவே புரிந்துகொள்ளவில்லை. உன் திருமணத்தை நடத்தித்தான் ஆகவேண்டும், விரைவில். நானும் உன் காதலனுடைய பொறுமையை அளவுக்கு அதிகமாகவே சோதித்து விட்டேன்" என்று கனிவுடன் கூறினார் டாக்டர். குமாரியின் முகம் மலர்ந்தது, தந்தையின் அன்புமொழி கேட்டு மட்டுமல்ல, அதே சமயம் அங்குவந்து நின்ற, தன் காதலனைக் கண்டு.

***

”கப்பல் தலைவனானேன், கண்மணி. அப்பாவிடம் கூறு, ஆனந்தப்படுவார்!" -- என்றான் இளைஞன், எழிலரசியிடம், மலர் முகத்தை முத்தமிட்டுவிட்டு. அப்பாவின் அல்லலை விளக்கினாள் ஆரணங்கு. கப்பல் தலைவன் கடுங்கோபம் கொண்டான். உண்மைக்கு உழைக்கும் உத்தமனுக்கா இப்படி இடையூறு செய்கிறார்கள், "அன்பே! ஆயாசம் விடு. நாளை மறுதினம் கிடங்கிலே கூட்டம் நடத்தலாம். அங்குள்ள சரக்குகளைக் கப்பலில், துரிதமாக ஏற்றிவிட ஏற்பாடு செய்கிறேன். பிறகு,கிடங்கு, பொதுக் கூட்டம் நடத்த ஏற்றதாகிவிடும், என்று கூறினான் காதலன் - களிப்பூட்டும் இச்செய்தியைத் தந்தையிடம் கூறினாள், தத்தை! கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறலாயின, பொதுமக்கள் திரண்டனர், கிடங்கில். புதிய குறிப்புகள் தயாரித்