பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மக்கள் தீர்ப்பு


வந்தோம். ஆனால், மகாஜனங்களே! கடைசியில் சூழ்ச்சிக்காரர்கள், யாரும் செய்யத் துணியாத ஒரு விபரீத கார்யத்தை செய்துவிட்டனர். மாசுமருவற்ற மனமுடைய நம்முடைய டாக்டரை பொதுஜன உபகாரியான நம்முடைய டாக்டரை, சுயநலத்தைக் கருதாது, பாடுபட்டு வந்த நம்முடைய டாக்டரையே, அந்தப் பாவிகள், எப்படியோ மயக்கிவிட்டனர். அவர் வாயாலேயே, அவர் முன்பு. புகழ்ந்து கூறிய திட்டத்தை, ஆபத்தானது, தீதானது, நாசம் தருவது என்று பேசவைக்க, ஏற்பாடு செய்துள்ளனர். அதைக் கேட்டதும் நாங்கள் பதை பதைத்தோம் -- நெஞ்சம் குமுறிற்று -- நமது டாக்டரும், துரோகியாக முடியுமா, அவரைச் சதிகாரர்கள், சூழ்ச்சிக்காரர்கள் தங்கள் கையாள் ஆக்கிக்கொள்வது, முடிகிற காரியமா, என்றெல்லாம் எண்ணி மனம் துடித்தோம். கடைசியில் அவரையே கேட்டோம் -- அவர் முதலில் மறுத்தார் பிறகு மழுப்பி னார் -- கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்! அந்தப் பாபிகள் தயாரித்துக் கொடுத்ததை அப்படியே பொதுஜனங்களிடம் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அழைத்து வந்திருக்கிறோம். அவர் இப்போது அதைப் படிப்பார்! என்று, கூட்டத் தலைவன் பேசி முடித்தான். டாக்டருக்குத் தலை கிறு கிறுவென்று சுற்றுவதுபோலாவிட்டது, இந்த எதிர்பாராத தாக்குதலால், அண்ணன், வெற்றிப் புன்னகையுடன் வீற்றிருந்தான். டாக்டருக்குப் புயலெனக் கிளம்பிற்று கோபம். "பாபிகளே! பழிகாரர்களே! பச்சைக் புளுகு பேசும் அயோக்யர்களே! பாமரரை ஏய்க்கும் கயவர்களே! -- என்று ஏசினார். ஏற்கனவே, டாக்டர் துரோகம் செய்யத் துணிந்தவர் என்ற குற்றச்சாட்டைக் கேட்டுத் திடுக்கிட்டுப்போயிருந்த மக்களுக்கு, எப்போதும் அன்பாகவும் சாந்தமாகவும் பேசும் டாக்டர், கண்டபடி ஏசுவது