பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மக்கள் தீர்ப்பு


ஊர், பாட்டாளிகள் வாழும் பட்டினம்; அங்கு சென்றால், தங்களைப்போன்ற பொதுஜன சேவையாளருக்கு, இடமும் உண்டு, மதிப்பும் உண்டு என்று கூறினான் கப்பல் தலைவன். அண்ணன் முகத்திலே விழிப்பது கூடாது, அண்டப்புளுகருக்கு இரையான அப்பாவிகளின் ஊரிலே இருப்பதைவிட, வேற்றூர் போவதே மேல் -- என்று தீர்மானித்தார் டாக்டர். மறுதினம், தன் மகளையும் அழைத்துக்கொண்டு, டாக்டர், கப்பல்துறைக்குச் சென்றார்.

கப்பல் தலைவன், தலையைக் கவிழ்த்தபடி அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் கரத்திலே, அவனை. வேலையை விட்டு நீக்கிவிட்டதாக, கப்பல் கம்பெனி முதலாளி அனுப்பிய உத்திரவு இருந்தது. அந்த முதலாளி தன் அண்ணனுடைய கூட்டாளி என்பது டாக்டருக்குத் தெரியும். பெருமூச்செறிந்தார். "பொதுஜன விரோதி ஒழிக!' என்று கூச்சலிட்டபடி, சிறுகும்பல் கூடிற்று. மீன் பிடிப்போர் உபயோகிக்கும் சிறு படகு ஒன்றில ஏறிக்கொண்டு, மூவரும் பயணமாயினர். டாக்டரின் கண்ணீர் கடல்நீரில் கலந்தது. பொதுஜனம் இப்படித்தானா! அண்ணன் சொன்னபடி, ஆடும் பதுமைகள்தானா இந்தப் பொதுஜனம். ஆதாரம் காட்டாது, காரணம் கூறாது, அண்டப்புளுகு பேசினான். அதை நம்பி, என்னைத் துரோகி, சதிகாரன் என்று ஏசினரே, இவ்வளவுதானா இவர்கள் இயல்பு, என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான் டாக்டர். தன் மனக் குறையை, மருமகனிடம் கூறிக்கூறிக் குமுறினான். பொதுஜன சேவை பயனற்ற காரியம்! வீண்வேலை! பொதுஜனத்துக்குத் தெளிவு கிடையாது! சிந்தனா சக்தி கிடையாது! என்று டாக்டர் உண்மையாகவே எண்ணத் தொடங்கினார். அவர் அடைந்த அல்லல் அவருக்கு இருந்துவந்த ஆர்வத்தை, நம்பிக்கையை நசிக்கச் செய்தது. வேற்றூரில் வேதனையுடன்