பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

37


யும்போதும், அவன் மனதிலே, இந்த ஒரு எண்ணம்மட்டும் குடைந்தபடி இருந்தது.

***

"ரோஜா! விழா தினத்தன்று, நீ என்ன வர்ணப்புடவை உடுத்திக்கொள்ளப் போகிறாய், நீலமா, ஊதாவா?" என்று கேட்டாள் அல்லி. அல்லி, பத்திரிகை உரிமையாளரின் மனைவி -- இரண்டாம் தாரம் -- அழகைவிட ஆணவம் அதிகம் அவளுக்கு. ரோஜா, சீமானின் மகள் — செருக்குடையவள் தான் எனினும், அடக்கமானவள் என்ற பெயர் கிடைக்க வேண்டும் என்பதிலே அக்கரை கொண்டவள். எனவே, அதற்கான விதத்திலே நடிப்பாள். இரு அழகிகளும், சேலையைப்பற்றித் தொடங்கிய பேச்சு, கடைசியில், விழா நடத்தக்கூடிய அளவுக்கு வெற்றிகரமாகத் திட்டம் நிறைவேறியது யாரால், என்பதிலே வந்து முடிந்தது - வம்பும் வளர்த்தது. என் புருஷனுடைய பத்திரிகைப் பலத்தினாலேதான், வெற்றி கிடைத்தது -- என்று வீரம் பேசினாள், அல்லி. ரோஜாவுக்குக் கோபம் -- அப்பாவின் பணபலம்தான் வெற்றிக்குக் காரணம் என்று வாதாடினாள். வார்த்தைகள் தடித்தன.

"பொதி பொதியாகப் பண மூட்டைகளைச் சுமந்து என்ன பயன்! செல்வாக்கு வேண்டுமே! புகழ் வேண்டுமே!! பொதுஜன ஆதரவைத் திரட்டும் ஆற்றல் வேண்டுமே! பணம் இருந்தால் போதுமா?

"அல்லி! உன் கணவருடைய காகிதத்தை நீ மெத்தப் புகழ்கிறாய், உலகமறியாமல். என் அப்பா, மனம் வைத்தால், அதைப்போல ஒரு அரை டஜன் பத்திரிகைகளை, விலைக்கு வாங்கமுடியும் -- கூலி கொடுத்துக்கூட வேலை வாங்க முடியும்.”