பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மக்கள் தீர்ப்பு


"என்ன திமிரடி உனக்கு! சீமான்களை யார் இந்தக் காலத்திலே சீந்துகிறார்கள்! அவர்களுக்கு ஆதரவு தர யார் முன் வருகிறார்கள். என் புருஷருடைய பத்திரிகைப் பலத்தைப் பெற்றதாலேதான், உன் அப்பாவுக்கு ஊரிலே ஏதோ நாலு பேருடைய ஆதரவு கிடைத்ததே தவிர, அதற்கு முன்பு, அவரைக் கண்டாலே மக்கள் அருவருப்பர் -- தெரியுமா? சீமான்தான் -- ஆனால், ஊரைவிட்டுப் போய் விட்டாலே உன் சிறிய தகப்பனார், டாக்டர், அவருடைய செல்வாக்கிலே ஆயிரத்திலே ஒரு பாகம் கூடக் கிடையாது. உன் தகப்பனுக்கு - தெரியுமா! பத்திரிகைப் பலம் கிடைத்தது -- டாக்டரைக்கூடத் தோற்கடிக்கும் அளவுக்கு, பலம் பெற்றார் உன் அப்பா.

”உன் துடுக்குத்தனத்தை என் தந்தையிடம் கூறி தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், பார்”

"போடி! எங்கள் பத்திரிகையிலே, உன் அப்பனுடைய யோக்யதையைப்பற்றி எழுதி, மானம் பறி போகிறபடி செய்யாவிட்டால், என் பெயர், அல்லி அல்ல, பார்."

"நாளைக்கே, நான் ஒரு பத்திரிகையை நடத்தச்சொல்கிறேன் பாரடி, என் அப்பாவிடம் சொல்லி! பணத்தை வீசி எறிந்தால், காரியம் நடக்கிறது தானாக! ஒரு பத்திரிகையை நடத்துவதுதானா பிரமாதமான காரியம்."

***

இந்த வாக்குவாதத்தால் விளைந்த வம்பு, இரு வீடுகளிலும், தேம்பி அழுவதும் திக்கித் திக்கிப் பேசுவதுமாக வளர்ந்து, கடைசியில் அல்லியின் கண்களைத் துடைத்தபடி அவள் கணவன், ஆகட்டும் நான் அந்தச் சீமானின் யோக்யதையை அம்பலப்படுத்துகிறேன் என்று உறுதி கூறுவதும்,