பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

39


"கிடக்கட்டும் ரோஜா! புதிய பத்திரிகை ஆரம்பித்தால், அந்தப் பத்திரிகை தானாகக் கீழே விழுந்து போகும்" என்று சீமான் தன் செல்வக் குமாரிக்குக் கூறுவதிலும் போய் முடிந்தது. நேசத்துக்கு முறிவு!!

***

ரோஜாவும் அல்லியும் தத்தமது சமர்த்தைத் தாமே மெச்சிக்கொண்டனர். ஆனால், சீமானும் பத்திரிகை உரிமையாளரும், மோதிக்கொள்ள முன்வந்ததன் காரணம், ஆண ஆணவக்காரிகள் மூட்டி விட்டதால் மட்டுமல்ல! விழாவுக்குத் தலைமை தாங்க வருகிற வியாபார மந்திரிக்கு, யார் மாலை சூட்டுவது, விருந்தளிப்பது என்பதிலே, சீமானுக்கும் பத்திரிகை உரிமையாளருக்கும் தகறாறு கிளம்பிற்று -- எனவே தான், ரோஜாவும் அல்லியும் போட்ட தூபம் துரிதமாக வேலை செய்தது.

பொதுமக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு கொள்ளை இலாபமடிக்கும் இந்தச் சீமானுக்குத் தானா, சகல மரியாதையும், முதலிடமும் இருக்கவேண்டும். விழாவில் நான் கிள்ளுக்கீரையோ! டாக்டரின் கட்டுரையை அன்றே நான் வெளியிட்டிருந்தால், இந்தச் சீமானின் திட்டம் தவிடு பொடியாகி விட்டிருக்குமே!! இவ்வளவு பாடுபட்டு, இவனுக்கு ஆதரவு தேடித் தந்த என்னை, விழாவிலே, வந்தனோபசாரம் கூறத்தானா செய்வது! ஏன்? வியாபார மந்திரியுடன் நான் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பமே ஏற்பட முடியாதபடி, தன் வீட்டிலே அல்லவா, அவருக்கு ஜாகை, விருந்து ஏற்பாடு செய்கிறான்! பார்க்கிறேன் ஒரு கை. இனி தயவு தாட்சணியம் ஏன்? என்று எண்ணினான், பத்திரிகை உரிமையாளன், கோபத்துடன். விழாவுக்கு, வியாபார மந்திரியை வரவழைக்கவேண்டுமென்ற யோசனையைச் சொன்