பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

41


டிருந்தது - டாக்டரின் எச்சரிக்கை தரும் கட்டுரையை, ஏன் முன்பு பிரசுரிக்கவில்லை, இத்தனை நாள் ஏன் மறைத்துவைத்தார், இந்தப் பத்திரிகை உரிமையாளர் - என்று கேட்டார், சீமானின் பத்திரிகை ஆசிரியர். மக்கள், இதைப் படித்ததும், பதறினர்! இரு இதழ்களும் நடத்திய 'போர்'- வியாபார மந்திரியின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. அவர் எதிர்ப்புக்கு அஞ்சுபவர், எனவே, விழாவுக்கு வர முடியாது என்று எழுதிவிடலாமா, என்று எண்ணினார். இதற்கிடையிலே, சுகாதார மந்திரிக்கு, இதுதான் தக்க சமயம், தன் கோபத்தைக் காட்ட என்று தோன்றிற்று. குளிக்கும் இடம் - பூந்தோட்டம் - மருத்துவ விடுதி- போன்றவைகள் அமைக்கப்படும்போது, சுகாதார மந்திரியான தன்னை அழைத்துக் கௌரவிப்பது முறையே தவிர, இந்த விஷயமாகத் தொடர்பு அற்ற வியாபார மந்திரியை அழைப்பது முறையல்ல, அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதும் சரியல்ல என்பது, சுகாதார மந்திரியின் வாதம். அவருடைய கோபத்துக்கும் காரணம் அதுதான்!

இரு பத்திரிகைகளிலும் வெளிவந்த கட்டுரைகளையே ஆதாரமாகக் கொண்டு, பொதுஜன நன்மையை உத்தேசித்து, இந்தக் குளிக்குமிடத்தை உடனே மூடிவிடும்படி உத்திரவிட்டார். போலீஸ் மந்திரிக்கு இதை நிறைவேற்றுவதில் ஓர் தனி மகிழ்ச்சி -- ஏனெனில், விழாவுக்குப் பெருங்கூட்டம் கூடினால், தொல்லை ஏதேனும் வருமோ என்று பயந்துகொண்டிருந்தவர், அந்த மந்திரி. குளிக்குமிடம் மூடப்பட்டது! பொதுமக்கள், டாக்டரின் கட்டுரையை நிதானமாகப் படித்துப் பார்த்தனர் -- அவர்களுக்கு அப்போதுதான் அவருடைய அருமையும் பெருமையும் விளங்கிற்று. இப்படிப்பட்டவரை அல்லவா, நாம் துரோகி என்று