பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மக்கள் தீர்ப்பு


தூற்றினோம் என்று வருத்தப்பட்டனர். இவ்வளவுக்கும் காரணமாக இருந்த சீமான்மீது சீற்றம் கொண்டனர் -- ஆனால், அவரும் ரோஜாவும், ஊரைவிட்டுக் கிளம்பினர். இதை 'ஜாடை மாடையாக' அறிந்ததும், இந்தப் பத்திரிகைக்காரன், ஏன், இந்தச் சூதுக்கு உடந்தையாக இருந்தான், இதுவரையில் - ஏன், டாக்டருக்கு விரோதமாக வேலை செய்தான் - நம்மை ஏய்த்தது ஏன், என்று எண்ணினர் -- சீறினர் -- முடிவு, பத்திரிகை அலுவலகத்திலே, அமளி!! "பொதுமக்களே! சீமான் மிரட்டினான், நான் பயந்து போனேன் - அதனால்தான், டாக்டருக்குத் துரோகம் செய்தேன் -- என்னை மன்னிக்கவேண்டும்" என்று கெஞ்சினான், பத்திரிகை உரிமையாளன்.

'பணத்தைக் கண்டு பல்லிளிக்கும் உனக்குப் பத்திரிகை ஒரு கேடா! சீமான் மிரட்டினால் என்ன, பொதுமக்களிடம் உண்மையைச் சொல்வது தானே -- நாங்கள் சும்மா விட்டிருப்போமா, சீமானை' என்று கேட்டனர், மக்கள்.

”டாக்டரை வரவழைத்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றான், பத்திரிகை உரிமையாளன்.

***

அந்தத் திருநாள் வந்தது! டாக்டரின் கண்களிலே களிப்புக் கண்ணீர்! பேசவும் முடியவில்லை அவர் சார்பிலே, மருமகன்தான் பேசினான் -- டாக்டரின் பெருமையைமட்டுமல்ல -- இரண்டு இதழ்களுக்கும், கட்டுரைகள் தயாரித்துக்கொடுத்த மாஜி ஆசிரியன் பெருமையை. "இவ்வளவு ஆனந்தத்திலே சூட்சமத்தை மறந்துவிட்டீர்கள். அன்று நான் உண்மையை விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தபோது, அண்டப்புளுகு பேசி, என்மீது அபாண்டமான பழி சுமத்தி, என்னைத் துரோகி என்றும், சதிகாரனென்றும் கூறிய, குடியிருப்