பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

43


போர் சங்கத் தலைவனல்லவா, இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம்? -- என்று டாக்டர் கேட்டார். ”ஆம்! ஆம்!” என்று ஆர்ப்பரித்தனர், மக்கள். ஆனால், அந்தப்பொதுஜன விரோதி, 'எளியோர்' மாநாட்டுக்குத் தலைமை தாங்க வெளிபூர் சென்றுவிட்டான்!!

***

பொதுமக்கள், முழு உண்மை தெரியாதபோது, அவசர முடிவுக்குத் தான் வருகிறார்கள் -- உண்மை தெரிந்தாலோ அவர்கள் தக்க தீர்ப்பே தருகிறார்கள் -- என்று பூரிப்புடன் கூறினார், டாக்டர். "ஆமாம், ஆனால் பொதுமக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற, வசதி, வல்லமை, வாய்ப்பு இருக்க வேண்டும். பணந்தேடிகளிடமும், அவர்களைக் கண்டு பல்லிளிப்போரிடமும் பிரசார யந்திரம் இருந்தால், பொதுமக்கள் கண்களிலே மண்ணைத்தான் தூவுவர் -- தூயவனைத் துரோகி என்று திரித்துக் கூறுவர் -- பொதுமக்களை மயக்குவர், மிரட்டுவர் -- தவறான வழியிலேயும் திருப்பிவிடுவர் - என்றான், மருகன். ”உண்மைதான்! மக்களாட்சி ஏற்பட்டும், மக்களின் மாண்பு சரிவர வேலை செய்யாததற்குக் காரணம், இரும்பு முதலாளிகள், இன்னும் இதுபோன்ற பணந்தேடிகளிடம், பிரச்சார யந்திரம் சிக்கிக்கொண்டதுதான். மக்களாட்சி மலரவேண்டுமானால், இந்த நிலைமை மாறவேண்டும்" என்று டாக்டர் கூறினார். டாக்டரின் புகழ் ஓங்கிற்று -- அண்ணன், ஊர் திரும்பவே அஞ்சினார். ஊரார் சும்மா விட வில்லை; நகராட்சி மன்றத்தைத் திருத்தி அமைத்தனர். நாசம் தரும் திட்டத்தைத் தயாரிக்கப் பொதுமக்களின் பணத்தைச் செலவிட்ட நகராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு நோடீஸ் கொடுத்தனர்!! அந்த நோடீசும், டாக்டர், பொது மக்களின் மாண்பைப்பற்றி விளக்கமாக எழுதிய கடிதமும்,