பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மக்கள் தீர்ப்பு


"மக்கள், எத்தனை முறை, தாங்களே செய்த தீர்ப்பைத் தாங்களே மாற்றிக்கொண்டனர் தெரியுமா? ஜூலியஸ்சீசர், மகாவீரன், ரோமாபுரிக்கு அவனே தக்க காவலன், என்று உன் 'பொதுஜனம் 'தான் தீர்ப்பளித்தது! அதே 'பொதுஜனம்' பிறகு, சீசர் சர்வாதிகாரி, முடிதரிக்க முயல்கிறான் - குடியாசைக் குலைக்கிறான், என்று கொக்கரித்தது. சீசர் கொல்லப்பட்டான். அழுகுரலிலே அறிவையும் கலந்தான் அன்டனி! உடனே உன் 'பொதுஜனம்', என்ன செய்தது சீசரைக் கொல்லச் சதி செய்தவர்களின் இரத்தத்தைக் குடிக்காவிட்டால், ஆவேசம் அடங்காது என்று ஆர்ப்பரித்தது"

”தவறுகள் செய்வது, இயற்கை...."

”எத்தனை தவறுகள்! எவ்வளவு முறை! சாக்ரடீசைக் கொல்ல, உன் 'பொதுஜனம் இணங்கிற்று - பிறகு, அவனை 'மகான்' என்று கூறி மகிழ்ந்தது. என்னதான் சொல்லு, பொதுஜன அபிப்பிராயம் என்பது கானல்நீர் - அல்லது வானவில் - அல்லது நீர்மேற் குமிழி..."

"இல்லை-இல்லை - விஷயம் விளங்காதபோது, விஷமியின் வலையில் வீழும்போது - முழு உண்மை துலங்காத போது நீ, கூறுகிறபடி, பொதுமக்கள், தவறான தீர்ப்பளித்திருக்கிறார்கள், ஆனால், உண்மையை அவர்கள் உணரும்படிச் செய்தால், அவர்கள் உள்ளம் கானல்நீரை அல்ல, எப்படிப்பட்ட அநீதியையும் அழிக்கும் பெரும்புயலைக் கிளப்பி விடும்! மக்களின் மனவலிமை மகத்தானது - அது மன்னர்களின் படைவலிவை முறியடிக்கக்கூடியது.”

"சரி, சரி. உன்னோடு பேசுவதைவிட, ஏதாவது வியாபார காரியத்தைக் கவனிக்கலாம். நீ போய்வா! பொதுஜனத்