பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

5


தீர்ப்பு, புனிதமானது! மக்களின் தீர்ப்பு மகத்தானது, மகேசன் தீர்ப்புக்குச் சமம்!"

"கேலி பேசுவது சுலபம்.... அதிலும் பெரியவர்கள் பேசுவது மிகவும் சுலபம்.....".

"வாழ்க! வாழ்க! 'என்றுதான், பொதுஜனம் முழக்கமிடுகிறது ... உன்னைப் புகழ்கிறது .... வீரன் உதாரன் என்று ஏதேதோ பட்டம் கொடுத்து உன்னைப் பாராட்டுகிறார்கள்.

"ஆமாம் நான் அவர்களுக்காக உழைக்கிறேன் - அவர்கள் பொருட்டு பாடுபடுகிறேன், என்பதற்காக, பாராட்டுகிறார்கள். மாளிகைகளிலே தான் நன்றிகெட்டவர்கள், நற்குணத்தை மதிக்காதவர்கள் இருக்கிறார்கள்! மக்கள் அப்படியல்ல! யார், தங்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் என்பதை அவர்கள் உணருகிறார்கள் - உணர்ந்ததும், அப்படிப்பட்ட உபகாரிகளை..."

"பொதுஜனத் தலைவர் என்று கூறிப் பூரிக்கிறார்கள் -- பெருமைப்படுத்துகிறார்கள்”

"ஆமாம் -- அதிலேயும் உங்களுக்குச் சந்தேகமா?"

"அதிலே சந்தேகம் ஏன் பிறக்கப்போகிறது! நான் தான் கண்ணால் காண்கிறேனே - அவர்கள் உன்னைக் கண்டதும், கொள்ளும் மகிழ்ச்சியையும், காட்டும் மரியாதையையும்!"

பிறகு, எதிலே சந்தேகம்? எதிலே அவநம்பிக்கை?'

"பச்சையாகவே சொல்லட்டுமா? மக்களின் மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. ஆட்டுவிக்கிறபடி ஆடுவர்! இன்று உன்னைப் பொதுஜனத் தலைவன் என்று புகழும், இதே மக்கள், உன்னைப் பொதுஜன விரோதி என்று தூற்றவும் கூடும்"