பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மக்கள் தீர்ப்பு


'ஆமாம் -- நான் தவறி நடந்தால் -- துரோகம் செய்தால், அவர்களின் நலனைக் கெடுத்தால்..."

"அல்ல! அவ்விதம் அவர்கள் எண்ணிக்கொண்டாலே போதும், ஆர அமர யோசிக்காமலே, ஆத்திரத்தைக் கொட்டுவர். எவனாவது ஒரு தந்திரக்காரன், உன் நடவடிக்கையைத் திரித்துக் கூறி, உன்னால் பொதுமக்களின் நலம் கெட்டுவிடும் என்று கூறிவிட்டால்கூடப் போதும். பொதுமக்கள் சிறுவர் - சபிப்பர். அவர்களின் எண்ணம் நிலைத்துமிராது யோசிக்கும் திறமை பழுதுற்றுத்தான் இருக்கும்."

"அப்படி அவர்கள் மனதிலே, சந்தேகம் கிளம்பினால், நாம், உண்மையை விளக்கி, சந்தேகத்தைப் போக்கியிட முடியும்."

"அதுதான் முடியாது. உன்னைப்பற்றித் தப்பு அபிப்பிராயம் கொண்டுவிட்டால், நீ தரும் விளக்கம்; விரோதத்தை வளர்க்கும், உன்னுடைய சமாதானம், சாகசம் என்று கருதப்படும். பைத்யக்காரா, உன்னைச் சமாதானம் கூற, விளக்கம் தரவே அவர்கள் அனுமதிக்கமாட்டார்களே! அவசரமான முடிவுக்கே வருவர்! அந்த முடிவை, மாற்றிக் கொள்ளவும் விரும்பமாட்டார்கள், சுலபத்தில்."

"இல்லை! உண்மையைக் கேட்க அவர்கள் எப்போதும் சித்தமாக இருப்பர்.

"உனக்கு அவர்களிடம் அபாரமான நம்பிக்கை இருக்கிறது - அனுபவம் போதாததால்...... உன்னை நான் மிரட்டுவதாக எண்ணிக்கொள்ளாதே, எந்தப் பொதுஜனம் இன்று உன்னைப் பாராட்டுகிறதோ, அதே மக்கள், உன்னைப் பொதுஜன விரோதி என்று தூற்றும்படி, செய்யமுடியும்...... என்