பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

7


னால்...விஷப் பரீட்சை - என்றாலும், நீ விரும்பினால், செய்து காட்டுகிறேன் - நீயோ, என் தம்பி! உனக்குக் கெடுதியாகக் கூடாதே என்று கவலைப்படுகிறேன் -- இல்லையென்றால் -- பொதுமக்களின் மனம் எப்படிப்பட்டது என்பதை விளக்கியே காட்டிவிட முடியும்"

"கட்டாயமாக அந்தப் பரீட்சை நடத்தியே ஆகவேண்டும். அண்ணா! தோல்வி உனக்குத்தான்”

***

மூத்தவன் சிரித்தான்? தம்பியின் மூகத்திலேயோ எள்ளும் கொள்ளும் பொறியும் போலிருந்தது. அண்ணன், பணக்காரன்; ஆகவேதான், பொதுமக்களின் பண்புபற்றிச் சந்தேகிக்கிறான். பொதுமக்களின் சக்தியிலும் குணத்திலும் சந்தேகப்படுவது, ஓர்வகை நோய் - அது மாளிகைவாசிகளுக்கு எப்போதும் இருக்கும் -- என்று தம்பி, தீர்மானித்தான்; தம்பி, ஒரு டாக்டர்.


சிறிய நகரம் -- அண்ணன், தம்பி, வேறு வேறு குடித்தனம் செய்துவந்தனர் -- ஆனால் விரோதம் கிடையாது. என் அண்ணனுக்குப் பணம் என்றால் உயிர் -- பாழாய்ப் போன பணத்திற்காக, அவர், எதை வேண்டுமானாலும் செய்வார் -- என்று தம்பி, பிறரிடம் கூறுவதுண்டு அண்ணனிடம், நேரிலேகூடச் சொல்வதுண்டு! நமது தம்பியின் போக்கு ஒருவிதமானது பொதுஜன உபகாரியாக வேண்டுமென்பதற்காக டாக்டர் தொழிலைக்கூடக் கவனிக்காமல், ஊருக்கு உழைக்கிறேன் என்று பேசிக்கொண்டு, உருக்குலைந்து போகிறான், என்று அண்ணன், பலரிடம் கூறுவதுண்டு -- தம்பியிடமே பேசுவதுண்டு. டாக்டருக்கு, பொதுமக்களிடம் அளவு கடந்த பிரியம், நம்பிக்கை, மதிப்பு. ஜனநாயகக் கோட்பாட்டிலே அசைக்கமுடியாத பற்று