பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊蘇 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

அவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு நிதி திரட்டிட சென்றபோது, .ெ ட நாட்டில் வாரனாசி எனும் காசி மாநகர் அருகே உள்ள அயோத்திக்கு அடுத்த பைசாபாத் நகரிலே பொங்கிய காய்ச்சலுக்குப் பலியாகி மாண்டார்! அவருடைய பினம் தமிழ்நாடு திரும்பிவில்லை!

வாடிய பயிருக்கும் வாடிய வள்ளல் பெருமானின் அருட்டாவை, இரண்டாவது அணியாக நின்று வம்படி வாதுக்கழைத்து, மருட்பா போராட்டக் களம் கண்டு தோற்ற, தமிழ்ப் பெருங்கடலொத்த சான்றோன்; தமிழ் அகராதி தொகுத்தோன்; தமிழ்த் தென்றல் திரு.வி.க.வினுடைய ஆசான், பன்னுற் புலவரான பண்டித நா. கதிரைவேற் பிள்ளை அவர்கள், சென்னையிலே இருந்து நீலகிரியிலே உள்ள உதகமண்டலத்திற்கு தமிழ் தொண்டாற்றவும், ஒய்வு பெறவும் சென்றிருந்தபோது, நோய் தாக்கித் திடீரென இறந்தார்: அவர் பிணம் சென்னை இருப்பிடத்திற்கு திரும்பிவில்லை!

தமிழக சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பதவி வகித்தவர் சி.பி. சிற்றரசு அவர்கள், சிறந்த பேச்சாளர் - சிந்தனை யாளர் புரட்சித் தலைவரால் மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்: ..

உலக சட்டமன்ற சபாநாயகர்கள் மாநாடு, ஆஸ்திரேலியா கண்டத்திலே உள்ள சிட்னி மாநகரிலே நடைபெற்றது. சி.பி. சிற்றரசும், அதன் அழைப்பை ஏற்றுக் கலந்து கொள்ளச் சென்றார். தமிழ்நாடு திரும்பாமலேயே எதிர்பாராத விதமாக அங்கேயே மாண்டார்: பிணம்தான்் விமானத்தில் வந்தது: . அதைக் கொண்டு வந்ததது எம்.ஜி.ஆர். என்ற மனித நேயம்:

நீதிக் கட்சியின் சிற்பிகளில் ஒருவராகத் திகழ்ந்த சட்டமன்ற உறுப்பினரான அஞ்சாநெஞ்சன் சர்.ஏ.டி., பன்னிர் செல்வம், இங்கிலாந்து நாட்டிலே நடைபெற்ற பிரிட்டிஷ் பேரரசு மாநாட்டிலே கலந்து கொள்ளச் சென்றார். போகும் வழியில் ஒமான் கடல் விமான விபத்தால் இறந்தார் மறுபடியும் அவர் பிணம்கூட தமிழ்நாடு திரும்பவில்லை! -