பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 121.

சிலிர்க்க சிலிர்க்க அவன் ஒச்சிய சொற்போர் ஆயுதங்களின் வலிமையை - நாம் காணலாம் - வால்மீகியிலும், கம்பனிடத்திலும்:

அறம் வழுவா அத்தகைய மற வேந்தனின் பெயரைப் புனைப் பெயராகப் பூண்ட கவிஞர் வாலி, இதிகாச வாலியை ஒப்ப, திரை சாம்ராச்சியத்தில் வீர உலா வரும் ஒரு கவிஞானி - தன் மானி!

வஞ்சனைகளற்ற வாஞ்சனையாளர் துஞ்சும் நேர மெல்லாம் முஞ்சும் தமிழால் கொஞ்சி, ஆன்மாவுக்கு அஞ்சலி செய்பவர் கிடைக்கும் பிஞ்சு புகழுக்காக நெஞ்சை அடகு வைக்க விரும்பாத பஞ்சு மனம் கொண்டவர்.

அவருடைய அருந்தமிழ் பாடல்களை, இசைத் தமிழ்க் கீதங்களை, செந்தமிழ் தெள்ளமுதமான கவிதைகளை நாம் தமிழியல் துறைகள்தோறும் சுவைத்து வருகின்றோம்!

எழுதுகோலை வாலி ஏந்திவிட்டால், எகிறிக் குதித்து எம்பி வந்து விழும் அவருடைய வாழ்க்கைச் சம்பவ சிந்தனைகள் கோலார் சுரங்கத்திலே கிடைக்கும் கட்டிகளாக மதிக்கப்படுகின்றன.

எழுத்துக்கள், அவரை மீறி இயல்துறையிலே அணிவகுக் கும்போது, இராஜ நடையான அழகும், புகழும் பெற்று உரைநடை என்ற பெயருலாவாக வருகின்றது:

அதே எழுத்துகள், பாடல்களிலே பண்னோடு இணைத் தால், ஆடற்கலை அழகாகி பரத நாட்டியம் ஆடுகின்றது!

கவி அரங்கங்களிலே களிநடமிடும் அந்த எழுத்துக்கள் அட...டா...வோ, காளமேகனாகின்றது! -

சில இடங்களில் கவிதைக்கொரு பொற்றேங்காய் பெற்ற பாண்டவர் பூமி பரணியாகவும் கொம்பூதுகின்றது:

அரிய இத்தகைய ஆற்றலைப் பெற்ற கவிஞர் வாலி என்ற கவி ஒட்டக்கூத்தனைத்தான்் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அரசு இயல்-இசை-நாடகம் சங்கத்திற்கு தலைவராக்கிப் பெருமைபடுத்தினார்: