பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

唱芝莎 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

தமிழ் மறை, தரணிக்கெல்லாம் பொதுமறையாகாமற் போனாலும், இந்திய தேசிய நூலாக வைக்கலாம் - மதிக்கலாம் - மரியாதை கொடுக்கலாம்! அந்த அதிகாரமும் என்னிடம் இல்லையே! * .

மத்திய அரசிடம் அல்லவா இருக்கிறது? மடி பிச்சை ஏந்தி - தான்் மன்றாடினாலும் மாதான்ுபங்கியின் வைரச் சிந்தனை களை மதிப்பார்களா - மத்திய அரசினர்? .

நீங்கள் நினைக்கலாம்; மத்திய அரசு என்னுடன் அரசியலில் கூட்டணியாக இருக்கிறது என்று! இமய சிகரத்தின் முகடைத் தமிழக அரசு என்ற தண்டு கொண்டு தாக்கினாலும் சரிய - வைக்க முடியாது!

மகாத்மா காந்தியடிகளின் சாந்த தத்துவத்தை கடை பிடித்தாலும், நம்மால் சரி கட்டிட இயலாது என்ற இறுதியை, உறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன்! என்னாலோ எனது ஆட்சியினாலோ நடக்காத செயல் இது! என்றுதான்் பேசுவார் என்று - விழாக் கூட்டத்தினரும் உரையாற்ற வந்த அறிஞர் களும் கருதினார்கள்! எதிர்பார்த்தார்கள்!

செம்மேனிச் செம்மல் செவ்வேள் போல எழுந்தார்! வேறு எதையும் விளக்காமல் திருக்குறள் நூலைத் தமிழ் தேசிய நூலாக்குகிறேன்' என்றார்! -

அண்டம் அதிர்ந்ததா - மண்டபம் அதிர்ந்ததா? என்று உணர இயலவில்லை. அந்த இமை கொட்டும் விநாடி களிடையே!

தவத்திரு அடிகளாரும் மக்களோடு மக்களாய், கை கொட்டி மகிழ்ந்தார்; விழா ஒரே களி கோளமாக உருண்டது!

தமிழகத்தின் முதலமைச்சாரக அவர் பன்னிரெண்டாண்டு காலம் இருந்தபோது, உலகமே செய்யாத, நினைத்துகூடப் பார்க்காத சத்துணவுத் திட்டதை ஆரம்பித்தார். . . . .

ஏறக்குறைய 250 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து, 80 லட்சம் பிள்ளைகளுக்குக் கல்விக் கனியமுது வழங்கிடும் திட்டம் தீட்டி செயல்படுத்தினார்! ஏன்?