பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 12?

உணவு இல்லாமல், பள்ளிக் கல்வியை இழக்கும் பாலச் களுக்கு மட்டுமல்ல, பத்து பதினைந்து வயது சிறுவர், சிறுமி களுக்கும் சேர்த்தே, சத்துணவு போடுமாறு கட்டளையிட்டார்!

சத்துணவு மட்டுமா கொடுத்தார்? உணவை உண்ண தட்டுகள், பள்ளிச் சீருடைகள், இலவசப் புத்தகங்கள், எழுதும் நோட்டுகள், பல் துலக்கிட பற்பொடி, காலுக்குரிய காலணிகள், எல்லாமே கொடுத்து மாணவர்கள் கல்வி பெற மனிதாபிமான உதவிகளைச் செய்தார்!

இப்படி ஒருவர் உலக வரலாற்றில் இருந்தால் உதாரணம் கொடுங்களேன்! அவரைத் தெய்வமாகப் போற்றலாம்!

இலவசக் கல்வி, மதிய உணவு, இலவசப் புத்தகங்கள் போன்றவற்றை கர்ம வீரர் காமராஜர் வழங்கவில்லையா என்று சிலர் கேட்பார்கள்!

இந்தத் திட்டம், நீதிக் கட்சி மெட்ராஸ் ஸ்டேட்டை ஆண்டபோது திட்டப்பட்டு செயல்பட்ட திட்டமாகும்! அதை அமெரிக்க யுனெஸ்கோ உலக மாமன்றம் பாராட்டுமளவிற்கு விரிவுப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். காமராசர் காலத்தில் தமிழக வருவாய்க்கு ஏற்ப, சில நூறு பிள்ளைகளுக்கு அந்தத் திட்டம் பயன்பட்டது. ஆனால், சத்துணவுக்கு மட்டும் ரூபாய் 250 கோடிக்கு மேல் செலவழித்த அற்புத மனிதன் யார் எம்.ஜி.ஆரைத் தவிர?

'இந்த திட்டம் வெற்றி பெறாது! பள்ளிப் பிள்ளைகளைத் தட்டேந்த வைத்து விட்டானே, பாவி பெற்றவன் சோறு போட மாட்டானா? சோற்றுப் பிச்சை எடுக்க வைத்து விட்டானே! நடக்குமா? ஆண்டுதோறும் 250 கோடிக்கு மேலே செலவு செய்ய பணம் எங்கே?'

'இந்த ரூபாயை கொண்டு தொழிற்சாலைகளைத் துவங்கலாமே! பணம் பாழாகின்றதே ' என்று ஏகடியம் பேசினார்கள் இரக்கமற்றவர்கள்: