பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 雷德懿

இரண்டாவது தடவையாக, மக்கள் திலகம் சாவு ஒன்றுதான்், தமிழக மக்களைத் தட்டி எழுப்பி, மரண ஒலத்தை பந்த - பாசத்தோடு இயக்கியது:

களத்திற்கு அணி வகுக்கப்பட்ட படைகள் போல, நேரமாக ஆக, கண்ணிர் சிந்தும் மக்கள் அணிவகுத்து, நொந்த உள்ளத்தோடு சென்னை மாநகரெங்கும் அலைந்தபடியே சூழ்ந்தார்கள்:

கூடுகின்ற பொதுமக்கள் கூட்டத்தைப் பார்த்து - காவல் துறையும் ராணுவமும் பெருமூச்சு விட்டவாறே ஆங்காங்கே பாதுகாப்பிற்காகத் திரண்டன:

ஒன்றையொன்று நெருங்காமல், தத்தம் பாதைகளிலே ஒடி பூமிக் கோளத்தை இயக்கும் கோள்களைப் போல கண்ணிருடனும், மனவேதனையுடனும் வந்த பொது மக்களும் தொண்டர்களும், தங்கள் தலைவரின் பொன்னார்மேனியைக் கான இரவுப் பகலாகப் பொறுப்போடும், கடமையோடும், அமைதியாக அணிவகுத்துச் சென்றனர் . ராஜாஜி மண்டபம் நோக்கி:

அறிஞர் அண்ணா அவர்கள் திருவருவம் பொறித்தக் கொடிகள் எல்லாம், சென்னை மாநகரமெங்கும் அரைக் கம்பத்திலே தலைகுனிந்து தொங்கி, சோகமே உருவான துயரத்தை எதிரொலித்தப்படியே காட்சி தந்தன!

அறிஞர் அண்ணா அவர்களுக்கு நடந்த அதே சாவு சடங்குச் சம்பவங்கள்; அப்படியே மக்கள் திலகம் மரணத்திலும் தமிழகப் பாச மரபுப்படி நடத்திக் காட்டித் துன்பத்தால் துடி துடித்தோம்: ஒவ்வொரு பட்டி தொட்டிகளிலும், இந்த சோக மயமானக் காட்சிகளே நடந்து கொண்டிருந்தன:

தமது இனத்துள் ஒன்று இறந்துவிட்டால், இறகுகளாலும், சிறகுகளாலும் படப்டவென அடித்துக் கொண்டே கூடிடும் வானத்துப் பறவைகளைப் போல, தொண்டர்கள் தலைநகரிலே கூடினர் குவிந்தனர்!