பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $3

அதனால், இந்த படைப்பிலக்கியத்தைச் சிறு ஓவியமாக வரைந்து, தமிழர்தம் இதய மலராசனங்களிலே பொன்மனச் செம்மலைக் கொடைக் கோமானாகக் கொலுவேற்றிக் கொண்டிருப்பவர்களுக்காகப் படைக்கின்றேன்.

என் எதிரே கடல்! என்னைத் தாங்கியிருப்பது தாமரைக் கோட்டத்து மண்!

எனக்கு மேல பரந்த வானம்! எனக்குத் துணை, பரங்கிமலைப் பாரியின் பாசம்!

நான் தன்னந் தனியன்!

மனிதனைவிட உயரமானது ஒன்றுண்டு! ஒளியால் அதனைக் கணக்கிட முடியாது; ஒலியாலும் கேட்க இயலாது!

உணர முடியுமா அதனை? முயற்சிக்கவில்லை.

உணர்ந்தவர்கள் யாராவது உண்டா? இன்றுவரை அவர்களைச் சந்திக்கவில்லை!

அண்டத்தில் அடங்கியதா அது? அந்த முடிவை இப்போது என்னால் கூற முடியவில்லை!

மனிதாபிமான உயர்ச்சிக்கு - வள்ளண்மைக்கு நடிகரும் நாடாளலாம் என்பதற்கு - இந்தக் கூம்பியத் தாமரைக் கோட்டக் கல்லறையே சான்று!

வாழ்க்கை ஒரு சிறிய இடம்! அதில் விளையாடுகின்ற மர் மன்னர்களும், ஏழை மக்களும் இடம் போதாதக் காரணத்தால், இத்தகைய கல்லறைகளுக்குள்ளே நுழைந்து விடுகிறார்கள்!

அத்தகைய கல்லறை மேலே நான்! மிகச் சிறிய ஓரிடத்திலே! சிக்கனமான ஒரு பகுதியிலே!

கல்லறை என்பது வாழ்க்கையின் வடிவம்: கடைசி

நாளின் சின்னம்! காண வருவோருக்கு அது ஒரு காவியத் தாஜ்மகால்!