பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

பங்காளரின் இலக்கியக் கோயிலைக் கட்டி முடித்திட எண்ணினேன்!

என் தெரியுமா? அரசியலில் நானும் கறை படா கைகளைக் கொண்டவன்! எந்த பதவியையும், பெறாதவன்! ஏழ்மையில் உழலும் ஒர் எழுத்தாள ஏழை!

எந்த சடையப்ப வள்ளலாவது எனது எழுத்துக்களுக்கு ஏந்தல்களாக மாட்டார்களா?

எண்ணற்ற நூற்களை, தமிழ் காணா வகையில் எழுத மாட்டோமா என்ற ஏக்கத்தால், அலை மோதுகின்றவன் நான்!

அரசியல் கறையுடையவனாக இருந்தால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கல்லறையிலே இருந்து, இந்தக் கண்ணிர்க் காவியத்தை எழுத - எனக்கென்ன பைத்தியமா?

காரிலே பறந்து, கன்னியர் சூழ்ந்து, தன்நலப்புண்னர் புடைசூழ, தப்புத் தாளப் பக்கமேளங்களுடன், பங்களாவில் இருந்தல்லவா மண்ணின் கோலாகல போகங்களை அனுபவித்துக் கிடப்பேன் - அல்லது எழுதுவேன்:

கற்பனைக்காக நான் இதைக் கழறவில்லை! ஏனென்றால், கற்பனைக்காக நான் எங்கேயும் ஒடித் திரிபவன் அல்லவே!

எப்போதாவது அப்படி இறகுகள் எனக்கு முளைத்தால், நான் மதிக்கின்ற உயிருக்கு உயிரான கவிஞர்கள், எழுத்தாளர் கள், இலாப நோக்கோடு அதனைக் கத்தரித்து விடுவார்கள்!

அவர்களைப் போல, மனிதனாக இருந்து பறவையாக மாறுபவன் - நானல்ல!

பறவையாக இருந்து, நான் மனிதன் ஆனவன்! பறவை என்றால் பொருள் புரிகின்றதா?

என் உயிர்ப் பறவையைத்தான்் கூறுகின்றேன்; அது இல்லை என்றால் மனிதன் இல்லைதான்ே....!

கருவறைக்குள்ளே நான் இருக்கும்போது என்னுடன் இயற்கை பேசிற்று! அதனுடன் நான் பேசவில்லை. அப்போது எனக்கு வாய் இல்லை; காது மட்டும்தான்் இருந்தது!