பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 3?

நான் கேட்டதை உங்களிடம் கூறுவதற்காகவே, இந்த எண்ணக் கோயிலை எழுப்பி இருக்கின்றேன்.

கோயிலுக்குள்ளே சிலை இருக்காது. சித்தாந்த வேதாந்தச் சிக்கலுக்கு இங்கே இடமில்லை!

ஆதிக்கும் - அநாதிக்கும் வாதாடுகின்ற எழுத்துக் கூட்டங்கள் இல்லை - இங்கே!

இந்த எண்ணக் கோயிலைக் கட்டிட யார் யாரை நான் நாடினேனோ, அந்த உத்தமர்கள் - நட்பு மறவா சுகானந்தச் செம்மல்கள் - மனச்சுத்தம் உடைய பக்தர்களின் இதயங்கள் - இங்கே இருக்கின்றன!

"நானும் இருப்பேன், யார் யார் உதவி செய்வார்கள் என்ற ஏழ்மையோடு என்னோடு இயற்கையும் இருக்கும்.

இந்த நூலுக்கு அடிப்படை என் இறந்த கால எண்ணங் கள், நிகழ்கால அநுபவத்தோடு காதல் செய்யும்போது, எதிர்காலம் வாழ்த்துக் கூறுமோ - வசை பாடுமோ அவைதான்்! புரட்சித் தலைவர் சதுக்கம் இன்று இருக்கலாம். புது ஆட்சிகள் பூக்கும் போதெல்லாம், கவனிப்பாரற்று வேரற்றுப் போகலாம் - அரசியல் திருவிளையாடல்களால்!

கால வெள்ளத்தால் - கடற்கோபத்தால், இயற்கையின் இன்னல்களால் - அழியலாம்.

கன்னித் தமிழ்ச் சங்கத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கபாடபுரம் மண் அழியவில்லையா? கவின் புகார் நகர் மூழ்கவில்லையா - கடற்கோள்களால்?

இரண்டாம் தமிழ்ச் சங்கம் பிறந்த தென் மதுரை எங்கே? மாமல்ல்புரத்தின் முழு உருவமா இன்று இருக்கிறது?

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை எழுதிய வரலாற்றுத் துறவி இளங்கோ அடிகள், கோவலன் - கண்ணகி தம்பதிகளை, ஏழு நிலைகளை உடைய எழுநிலை மாட்க் கட்டிடத்தில், நான்காவது நிலையில், அவர்கள் பெற்றோர்கள் குடிய்ேற்றினர் என்கின்றார். கீழே மூன்று நிலை, மேலே மூன்று நிலைக்கு நடுவிலே உள்ள இடைநிலைதான்் அது: