பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 53

அரவணைத்து அரியணையிற் ஏற்றினோம்! அந்தக் குழந்தை காலம் ஆனது; மக்களை எல்லாம் அழ வைத்து விட்டு! என் செய்யலாம்!

இதுவரை, இயற்கையின் தன்மைகளை எம்.ஜி.ஆரிட முள்ள சில இயற்கைப் பண்புகளோடு இணைத்துப் பார்த்து இறும்பூதெய்தினோம்; கொடியேற்ற விழா தான்ே இந்த பகுதி!

எனவே, எனது எண்ணக் கோயிலினுள்ளே இருக்கும் அரசியல் அரங்கப் பிரகாரங்களைச் சுற்றிப் பார்ப்போமா!

r - ད་སྐད་ வள்ளலுக்கெல்லாம் வள்ளல்

புயல் மழையால் - தேசம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியினைக் காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணிரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல் ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல; சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய் அவன் கண்ணிரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர்., வள்ளலுக்கெல்லாம் வள்ளல்.

- 1961 ரிக்ஷா தொழிலாளருக்கு மழைக்கோட்டு வழங்கும் சென்னை நகர் விழாவில் அறிஞர் அண்ணா பேசியது