பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 57

அங்கே நடிகனுக்கு வேலையில்லை!

ஆனால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒப்பனையின் துணையால், ஒழுங்குற மனனம் செய்த வசனத்தை விளக்கும் முறையில், நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அப்படிப்பட்ட அவர், நடிக்கும் கலையோடு, தாமஸ் பெயின் துறைக்கும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மொழிச் சிக்கலா? புலவர்கள் இருக்க வேண்டிய இடத்திலே - செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர். இருந்தார்!

பொருளாதாரப் புறக்கணிப்பா? அந்தத் துறையிலே மேதைகள் எனப்படுவோர் பேச வேண்டிய கருத்துக்களை, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதும் சரி, தனிப்பட்ட சமயத்திலும் சரி - பேசினார்.

வெள்ளம் புகுந்து நாட்டை வேதனைப்படுத்தியதா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் விழிகளில் நீர்த் துளிகள் சுரந்தன.

பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி ஓடோடிச் சென்று, வேண்டிய உதவிகளைச் செய்து, அவர்களை அவர் அனைத்து கொண்டார்.

அரசு ஆற்ற வேண்டிய மக்களது கடமைகளை - கலைஞ னாகிய அவர், அயராது - அலட்சியப்படுத்தாது ஆற்றினார்.

தனது நாட்டிற்கு சீன எதிரியின் தாக்குதலா? இதோ எனது உதவி என்று, எம்.ஜி.ஆர். தன்னுடைய நடிப்பின் உழைப்பி லிருந்து, பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அவ்வப்போது மனமுவந்து கொடுத்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காமிரா முன்னாலே நின்று கொண்டு, எழுதிக் கொடுத்த வசனங்களை எழுத்தற ஒப்புவிப் பதிலேயே, முழு கவனத்தையும் செலுத்தியவர் அல்லர்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். சிறந்த சிந்தனையாளர்; மேடைப் பேச்சாளர்; பீறிட்டுக் கிளம்பிய அவரது உள்ளத்து வீரச் சொற்கள், நேரிட்ட எதிரியின் நெஞ்சத்தைப் பிளக்கும்