பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி §3

அதனால்தான்், சாக்ரடீசுக்குப் பிறகு வந்தவர்கள், அவனது தத்துவ வழியை விட்டு சிறிது நகர ஆரம்பித்தார்கள்.

சாக்ரடீசுக்குப் பின்னே தோன்றிய உலக நாடகப் பெரும் புலவரான சேக்ஷ்பியர், நடிகர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, 'இந்த உலகமே நாடக மேடை! தாமனைவரும் அதில் நடிகர்கள்” என்று துணிந்து கூறலானார்!

சாக்ரடீசைத் தவிர்த்தன்று; அவனையும் சேர்த்தே குறிப்பிட்டார் அவர் நாமும்கூட 'நாடகமே உலகம்' என்று சிறுகளத்துர் சாமா பாணியில் பாடவில்லையா?

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவுலக மாமேதை அறிஞர் அண்ணா அவர்களும், கலையைப் பற்றி கூற வந்த நேரத்தில், 'நாடகம் என்றால் கேவலமாக நினைக் காதீர்! நாட்டின் அகம் தான்் நாடகம்' என்று விளக்கமளித்தார்!

இத்துணை உயிரோட்டமான இலக்கியச் செல்வாக்கும், அதன் துணையும் இருக்கும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், ஏன் அரசியல்வாதியாக இருக்கக் கூடாது! என்ற வினாக்களைத் தொடுத்த தமிழக மக்கள், அவரை அரசியலரங்கத்திலே ஏற்றி அமர வைத்து அழகு பார்த்தார்கள்!

நாடகத்தில் வருகின்ற ஓர் ஏழை, துயரமான ஒரு பாடலை மனமுருகப் பாடும்போது, அதைக் கேட்கும் மக்கள் இரக்கப்படுகிறார்கள்.

ஆனால், அதே நிலையிலுள்ள ஒர் ஏழை, நடு வீதியிலே

பாடினால், அவனைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை

அதனால் தான்் அந்த ஏழை, 'அம்மா பிச்சை என்று இயற்றமிழிலே கேட்கின்றான்! அதற்கும் ஈரமில்லாத பெண் களைப் பார்த்து: 'அம்மா பசிக்குதே! என்று இசைத் தமிழால் பாடுகின்றான்!

அதற்கும் மனமுருகாத மங்கயைர்களிடம் 'நாடகமே உலகம் - நாளை நடப்பதை யாரறிவார்?' என்று, தகுதி