பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித் மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். லையாமையை அவன் நடித்துக் காட்டிப் பிச்சை ாடுக்கின்றான்.

Ës

ଟଁ

தொல்தமிழன் கண்ட பழந்தமிழ் மொழி, இயல்-இசைநாடகம் என்ற மூன்றும் கொண்ட முத்தமிழ் அல்லவா? இந்த மொழி அருமை வேறு எம்மொழிக்கும் இல்லை என்பதை, ஒருவன் பிச்சை எடுக்கும்நிலை கண்டே நாம் பெருமைப் படலாம்.

முத்தமிழாலும் பிச்சை எடுப்பவனின் மொழியுணர்வை அறியாதவர்கள் மத்தியிலேதான்், எம்.ஜி.ஆர். மனிதாபி மானியாக மாறி, ஏழைப் பங்காளரானார்:

அந்த ஏழைகள்தான்் அவரை சாகும்வரை மதித்து, அதன் நன்றிக் கடமையாக 'தமிழக முதல்வர்' என்ற அரியாசனத் தையும் அளித்தார்கள்!

பேரறிஞன் பிளேட்டோவைப் போல தாங்களும் அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அரசியல் கட்சி நடிகர்கள் அரசியல்வாதிகளாக நடமாடுவதைக் கண்டு, கூத்தாடிகள் என்ற கேலிக் கணைகளை எய்தார்கள் சிலர்.

காலம் அவர்களை முட்டாள்களாக்கி விட்டதே என்றுதான்் அறிஞர்கள் அனுதாபப்பட்டார்கள்:

பிளேட்டோவை சேக்ஷ்பியர் மறுத்து விட்டான்! இது அறிவுலகத்தின் பரிணாம வளர்ச்சி!

ஜெர்மன் நாட்டிலே பெத்தோவன் என்ற செவிடன் ஒருவன் வாழ்ந்தான்்! பெரிய இசை வித்தகன்! அவனும் பிளேட்டோ கூற்றுப்படி வெறுக்கப்பட்டவனாவான்!

ஆனால், உலகத்திற்குத் தேவையான மேலைநாட்டு இசை இலக்கணங்களை, அந்த காது கேளா மேதை இசைஞன் தான்் உருவாக்கித் தந்தான்்!

நாட்டைக் காப்பதற்காக ஒரு சாதிதான்் இருக்க வேண்டும் என்ற மாய்மாலத்தைத் தகர்த்தெறிந்த மாவீரன் பெத்தோவன்!