பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். கொடுத்தார். மீண்டும் அவரைத் தேடி அதே புகழ் நாடி வந்ததே! இது என்ன அதிசயப் பண்போ...!

இந்த அரிய செயலைச் செய்கின்ற மனப்பக்குவம் லாருக்குமே வந்து விடுமா? நூற்றாண்டுகளுக்கு ஒரு தடவை

ருவருக்குத் தான்ே அமையும்?

ஓரி

அந்த ஒருவர் எம்.ஜி.ஆர்.! கோடியில் ஒரு கோமான் எம்.ஜி.ஆர். கொடுப்பதையே தனது அறமெனக் கொள்கையாக்கிக் கொண்டவர் அவர். அதனால்; கொடைக் குணம் மனிதனைத் தெய்வமாக்குகின்றது. எப்படி?

'ஈவானே தெய்வம்' என்றாள் ஒளவை! ஈகை, இருமைக்கும் பெருமை ஈவது 'ஈதல் உயிர்க்கு ஊதியம்' என்றார் தமிழ் மறையாளர்:

கொடையால், பிற உயிர்களை வாழ வைக்கின்றான் ஒருவன்: வாரி வழங்குபவன் பொன்னும், பொருளும் உதவி, புவி வாழ் மக்களைப் பேணுகின்றான்! அதனால், அவன் பொன் உயிராய்ப் பொலிகின்றான்! மன்னுயிர் அவனை இன்னுயிராய் மதிப்பதில் தவறென்ன?

கொடுப்பவன் செம்பொன்! கொடாதவன் கரும்பொன். அதாவது இரும்பன்! மனம் இரக்கமற்றவன்! சிலர், காக்காப் பொன்னர்களாகத் திகழ்வார்கள்! அவர்கள் திரி சங்குவாதிகள்! எதையும் பற்ற முடியாமல் தொங்கியபடியே காட்சி தருவார்கள்!

தளர்ந்தவர்களுக்குத் தளராமல், எவன் தான்மும் தருமமும் புரிகின்றானோ, அவனுக்கு இயற்கை வாரிக் கொடுக்கின்றது! அதனால், ஊருக்கும் உலகுக்கும் அவன் ஊருணி போல ஊற்றுச் சுரந்து, ஏழ்மை வேட்கையைப் போக்குகின்றான்!

இதைக் கண்ட தகடுர் யாத்திரைக் காவியக் கவிஞர் 'நூற்றில் ஒருவன் வீரனிருப்பான்; புலமையாளனாக ஆயிரத்தில் ஒருவனாக புலப்படுவான்; ஏழைகளை எள்ளாமல், எவனொருவன் உள்ளம் உவந்து கொடுக்கும் கொடை செய்கின்றானோ, அவனை உலகம் முழுவதும் தேடினாலும் எங்கும் காண முடியாது' என்கிறார்.