பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவின்மிகு கலையரங்கம்!

கலை என்பது, ஒரு குறிப்பிட்டக் காலத்தின் வாழ்வை யும், நாகரிகத்தையும் காட்டுகின்ற காலக் கண்ணாடியாகும்.

மனிதக் கற்பனை, அறிவு நிரல்படுத்தப்படாத இயற்கை யை, திறமையினால், ஒழுங்காக்கி விடுமானால், அதனை, "கலை" என்று அழைக்கலாம்!

'சில்லெனச் சிதறி ஓடுகின்ற காற்றை, நிரல்படுத்தப்பட்ட மூங்கில் குழாயின் ஏழு துளைகள் வழியாக அனுப்பப்படும் போது, அது இசைக் கலை எனப்படுகின்றது! அதனால்தான்், இசையைக் குறிஞ்சி நிலம் பெற்றெடுத்த குழந்தை என்கிறோம்!

கரடு முரடான பாறை ஓரிடத்திலும், உளி எங்கோ ஒருவனிடத்திலும் இருக்கின்றது:

இவை இரண்டையும், மனிதக் கற்பனை அறிவு, ஓரிடத்தில் சேர்த்து, திறமையும் அவற்றுடன் கலக்குமானால், அதன் முழு வடிவம் சிற்பக் கலை' என்ற பெயரைப் பெறுகின்றது:

எல்லாக் கலைகளையும், இவ்வாறே விளக்கிக் கொண்டே, எழுதிக் கொண்டே போகலாம்! கலை வரலாறு அவ்வளவு சக்தி பெற்றது.

கலைக்கே இந்த இலக்கணம் என்றால், நேர்மையான ஒரு கலைஞனுக்குரிய இலக்கணம் எப்படி இருக்க வேண்டும்.