பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை 'சில நேரங்களில் சில மனிதர்கள் அமைவது ஆண்டவன் அருள்; முன்னே செய்த நல்வினை. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் -திருக்குறள் 警鑫态 இரத்தம் சுண்ட யான் உழைத்த உழைப்பை எல்லாம் உண்டு களித்தவர்களும் என்னை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாத கெருக்கடி நேரத்தில்-'என்னைப் பார்ப்பதும் ஆபத்து' என்ற காந்தியர்களின் அறிவுரைகளையும் துச்ச மாய் மதித்து எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆறுதலாய் இருந்தவர் முஸ்லீம் உயர் நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஓர் இந்து சாதி வகையால் எனக்கோ என் குடும்பத்துக்கோ எந்த வகையிலும் உறவு இல்லாத ஒருவர் என்னினும் பொருளாதார வசதிகள் குறைவான ஒர் அருட் செல்வர்! ஆம். அவர்தான் முற்றிலும் யான் தமிழை வெறுத்து விடாமல் காப்பாற்றிய தமிழாசிரியர் பெருங்கவிக்கோ உயர்திரு வா. மு. சேதுராமன் அவர்கள். குழந்தைகள் பல பெற்றுக் குழியில் போட்டுவிட்ட என் பெற்ருேர்கள் இராமேசுவரம் போய் என்னைப் பெற்ருர் களாம். அதனால்தான் என் தமக்கைக்கு தனுக்கோடி’ என்றும் எனக்கு சஞ்சீவி என்றும் பெயர் வைத்தார்களாம்! எனவே எனக்கும் திரு-சேது இராமனுக்கும் நெருக்கடி நேரத்தில் நெருங்கிய நட்பு ஏற்பட்டது விட்டகுறை; தொட்டகுறை ஆம். நிறைவான குறை !