பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தானெனு கினைப்புங் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து.மற் ருென்ருய் கின்ற எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி பதனுள் மூழ்கிட வாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை! மனோன்மணியம்-2 : 2 : 1.39-183. இந்தக் குற்றமற்ற உ ல கத் தி ல் உயிர் வாழ்க்கை ஒரு பெருங்கடலைப் போன்றது. ஆம்: பிறவி ஒரு பெருங்கடல். இப் பெருங்கடலில் ஓங்கி யெழும் அலைகள் மேலே செல்லும் கப்பலேப் போன் றது ஆண் மக்களுடைய நெஞ்சம். அறமாகின்ற துறைக்குள் புகாமல் எட்டுத் திக்கிலும் எற்றி அடிக்கும் புயற்காற்றுப் போன்ற நிலையில்லாத எண்ணங்களால் அலைப்புண்டு எ ங் கெ ங் கோ சென்று கல்லறிவினறி அலைந்து அல்லற்படுவது இவ்வான்மாக்களின் கெஞ்சமாகிய கப் பலி ன் இயற்கை அத்தகைய கப்பலை அறத்துறையாகிய குடாவில் கிலேயாக கிற்கும்படிச் செய்கின்ற நங்கூர மாவாள் இன்றைய மணமகள் - வாழ்க்கைத் துணைவி. அத்தோடு மனிதன்-ஆண்மகன்-செய் கின்ற வாழ்க்கை முயற்சிகளில் எத்தனையோ, பொய்வகையான புன்னெறிகள் சேரும் ; சாடும். அதனுல் ஆசையாகின்ற திசைதோறும் அலைந்து திரிந்து கெடாதவண்ணம் அமைதிவழி செலுத்தி அன்பு சேர்ந்த அறத்தையே உறுதியாகப்பற்றிச் சிறப்புடைய சுகத்துறை சேர்க்கின்ற சுக்கான்இன்றைய மணமகள்-வாழ்க்கைத் துனேவி. ஆனல், இத்தகையது கம் தமிழ் மங்கையரின்