பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 மதிப்பு என்று எண்ணி ஏங்குகின்றனர். அந்த மதிப்பைத் தேடிக்கொள்ளக் கடன்பட்டு உள்ள 'மதிப்பை'யும் இழக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். என்றேனும் ஒரு நாள் சட்டம் வந்து கட்டாயமாக மாற்றுவதிலும் நாமே அறிவாக எண்ணிப் பார்த்து மாறிவிடுவது எவ்வளவோ நல்லது அல்லவா ? நம் காட்டுத் திருமணங்கள் - செல்வர் வீட்டுத் திருமணமாயினும் - ஏழை வீட்டுத் திருமணமாயினும்-ஆண்டவன் கோயிலில் எம்பெருமான் - எம்பெருமாட்டித் திருமுன்பு நடக் தால் எவ்வளவு அழகாக இருக்கும் ! செல்வர்கள் திருமணத்தில் செய்யும் பெருஞ் செலவு அவர்கள் செல்வத்திற்கு அழகுதானே. அவர்களைச் செலவழிக்க வேண்டாமென்ருல் பணத் தைப் பூட்டியே வைப்பதா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம். திருமணத்தின்போது செல்வர்கள் செய்யவேண்டிய ஒருபெருஞ்செயல் அத் திருமண கினைவாக காட்டின் கல்விக்கூடங்கட்கு மன முவந்து பெருங்கொடை வழங்குவதே. ஒரு காட் டின் வளர்ச்சி எல்லாம்-வாழ்வு எல்லாம்-அங் காட்டுக் குழந்தைகள் பெறும் கல்வி-நல்ல கல்வி -பயனுடைய கல்வி - படிப்போடு நல்ல பழக்க வழக்கங்களை வளர்க்கும் கல்வி-அறிவோடு ஒழுக் கத்தை வளர்க்கும் அருமையான கல்வியிலேதான் இருக்கிறது. எனவே அக்கல்வி வளர ஏராளமான பள்ளிக்கூடங்கள் தேவை. வீடுதோறும் கலையின் விளக்கம் ; வீதிதோறும் இரண்டொரு பள்ளி' என்று பாடினர் கவியரசர் பாரதியார். ஆம். விதி