பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 குழலி எனவே, மொழிப்பற்று என்பது தெய்வப் பற்ருேடு ஒன்றி உயர்வதே ஆகும். அதனுலன்ருே குமரகுருபரர் மதுரை மீ னு ட் சி அம்மையைத் * தொடுக்குங் கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே !! கறை பழுத்த துறைத் தீங்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே என்று பக்திச்சுவை கனிசொட் டப் பாடினர், கம் தாய் நாடாகிய பாரதம் விடுதலை வேட்கை கொள்ள வழிகாட்டிய வரலாறு படைத்த நாடு களுள் ஒன்று இங்கிலாந்தின் அருகிலேயே-அதன் வலப்புறத்திலேயே இருக்கும் அயர்லாந்துத் தீவு ! ஆம். அங்கிருந்து வந்து நம் காட்டில் சுதேசி இயக்கம் சுடர்விடச் செய்த பெருமாட்டி அன்னி பெசன்ட் அம்மையார் ! அவர் தம் தாய்நாட்டின் தவப் புதல்வராகத் தோன்றிய தியாகச் செம்மலே டோரன்ஸ் மாக்ஸ்வினி. அவர் தம் வாழ்க்கை வரலாறு அவர் கொண்டிருந்த மொழிப்பற்றைதிருமணத்திலும்-தாய்மொழி மனங்கமழ வேண்டு மென்று வைத்திருந்த ஆர்வம்-அதில் அவர் துணைவியாருக்கும் இருந்த பெரும்பங்கு-இவை யெல்லாம் எவ்வளவு தெளிவாய்ப் புலனுகிறது பாருங்கள். அயர்லாந்தின் மக்கள் தங்கள் தாய்மொழி யிலேயே பேசவேண்டும் என்பதில் மாக்ஸ்வினி மிகவும் உறுதியானவர். அவர் நாட்டு இளைஞர் பலர் அவரைப் போலவே ஐரிஷ் குடியரசுப் படை யில் சேர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும்