பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30: கையில் மோதிரம் அணிந்து கொள்வது வழக்கம். அந்த மோதிரத்தை அணிந்திருப்பவர்கள் ஒருவருக் கொருவர் ஐரிஷ் மொழியிலேயே பேசுவதாகவும், வேற்று மொழியில் பேசுவதில்லை என்றும் சத்தியம் செய்திருக்கவேண்டும். மாக்ஸ்வினி இந்த உறுதி மொழியை மேற்கொண்டவர். பின்னல் அவர், மனக்துகொண்ட மாதரசியும் அங்த விரதத்தை மேற்கொண்டு மோதிரம் வாங்கி அணிந்திருந்தாள். அவர்கள் இருவர் மட்டுமா? அவர்களுடைய பெண் குழந்தை பிறந்த பத்து மாதம் ஆவதற்குள்ளே அதற்கும் ஒரு சிறு மோதிரத்தை அணிவித்தார் கள். அது வளர்ந்து பெரிய பெண்ணுகும்பொழுது தாய்மொழியிலேயே பேசவேண்டும் என்பதற்காக இளமையிலேயே மோதிரம் கைவிரலில் கிடக்கட்டும் என்று.அந்தப் பெற்றேர்கள்ஆர்வத்துடன் எண்ணி ஞர்கள். மாக்ஸ்வினியின் திருமணமே வியப்பான ஒரு நிகழ்ச்சி. அவர் குடியரசுப் படையில் ஒரு தள கர்த்தராக இருந்தார். அங்த ப்படையே சட்டப்பகை யானது. அதில் சேர்ந்த வீரர்களும், அதிகாரி களும் இராணுவ உடையை அணிந்ததற்காகவே பலமுறை சிறை சென்றிருக்கின்ருர்கள். 1916-இல் மட்டும் அவர்இருமுறை சிறையில் தள்ளப்பட்டார். அப்பொழுது ஒருமுறை அரசியல் கைதிகளைப் பார்த்து உதவி செய்வதற்காக வந்த ஒரு பெண் ணரசியைத்தான் அவர் மனந்துகொண்டார். இரு வருக்கும் முதலில் திருமண உடன்பாடு ஏற்பட்டது திருமணம் 9 - 6 - 1917-ல் சிறையிலேயே கடக்