பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 என்னும் அருமைத் திருக்குறள். மனைவாழ்க்கைக்கு இரு விழிகள் உண்டு. ஒன்று அன்பு ; மற்றென்று அறம். அன்பே வாழ்க்கையின் பண்பு ; அறமே வாழ்க்கையின் பயன். எந்த ஒரு பொருளும் மதிக் கப் பெறுவது அது பண்புடையதாய் இருப்ப தாலும் பயனுடையதாய் இருப்பதாலுமே ஆகும். இரண்டில் ஒன்றிருந்து மற்றென்று இல்லையான லும்கூடப் பயனில்லை. எனவே, இரண்டும் வேண் டும்-அன்பே பண்பாக, அறிவே பயனுக. இத் திருக்குறளுக்குப் பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்கள் தெளிவுரை வருமாறு : இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானுல் அந்த வாழ்க்கையில் பண்பும் பயனும் அதுவே ஆகும்.’ இத் திருக்குறள் நம் மணமக்களின் இரு விழி களாய் இலங்குமாக ! அடுத்து, வாழ்க்கைத்துணை கலம் என்ற அதிகாரம். இவ்வதிகாரத்திற்குத் தலைமை தாங்கும் முதற் குறள் ஒன்று உண்டு. அது, மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51) என்பது. இவ்வருமைத் திருக்குறள் மனைக்கு விளக்கு? என்று சங்ககாலச் சான்றேர்கள் போற்றிப் புகழும் குடும்பத் தலைவி-வீட்டுத் திருமகள்-இலக்கணத்தை 3 سنه 28 23