பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் திருமண முறைகள் பழமையும் புதுமையும் டாக்டர் க. சஞ்சீவி (i) தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களுள் ஒன்று தமிழினம். சமுதாய வாழ்க்கை முறைகளும் வளமும் வலிமையும் வாய்ந்த ஒன்று திருமணம். எனவே தமிழினத்தில் திருமண முறைகள் காலங் தோறும் உற்ற மாறுதல்களை ஆராய்வது ஒளியும் உணர்வும் தருவதாகும். 'திருமண முறைகள் - அன்றும் இன்றும்’ என்னும் சுவை பயக்கும் இத்தலைப்பில் பலரும் கருத்து விருந்து வழங்குவதையே யான் பெரிதும் விரும்புகிறேன். எனவே என் கட்டுரையை ஒரு துரண்டுகோல் கட்டுரையாகவே கொள்ள வேண்டு கிறேன். இக்கட்டுரையிலும் இக்கட்டுரைக்குரிய பொருளே ஆராய்ச்சிக்குரியது. எனவே (1) இக்கட்டுரையில் திருமணத்திற்கு முன் - பின் செய்திகள் பெரிதும் பேசப்படா. ஒரோ வழி ஒதக்கூடிய குறிப்புகளும் இன்றியமையாமை பற்றியே இருக்கும்.