பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 2. திருமணம் நல்லதா கெட்டதா என்பதும் திருமணம் தேவையா இல்லையா என்பதும் ஒரு திருமண முறையினும் மற்ருெரு திருமண முறை உயர்ந்ததா தாழ்ந்ததா என்பதும் உறுதியாக இன்று இங்கே ஆய்வுக்கு இல்லை. மேலும் அன்றும் இன்றும் திருமணத்திற்குரிய நிபந்தனைகள் பற்றியும் திருமணத்திற்கு முன்னும் பின்னும் அமையும் நிகழ்ச்சிகள் குறித்தும் றைய ஆய்வு இல்லை. (2) இனி, முதற்கண் திருமணம் என்ற ஒரு பொருள் சுட்டும் பல்மொழிகள் எவை எனக் காண் போம். அவற்றின் அகரவரிசை (1) கடி, (2)மணம்; (3) மன்றல்; (4) வதுவை, (5) வரைவு என்பதாகும். இவற்றுள் தொல்காப்பியம் முதலாகப் பதினெண் கீழ்க்கணக்கு ஈருக உள்ள மேல் கீழ்க்கணக்கு நூல்களுள் 12 இடங்களில் மணமும் 10 இடங்களில் வதுவையும் 6 இடங்களில் மன்றலும் 4 இடங்களில் வரைவும் வருகின்றன. இவற்றுள் மண்ணுத லாகிய (நீராடுதலாகிய) சிறப்பால் மனமும் மன்றில் நடைபெறும் மாட்சியால் மன்றலும் வரை யறை (எல்லை) செய்வதால் வரைவும் அமைந்தன எனலாம். தொல்காப்பியர் உரிச்சொல்லாக உணர்த்தும் 'கடி' என்னும் சொல்லுக்குப் பல பொருள்களும் கூறுகிருர். அவற்றுள் நீக்குதல்', 'காப்பு என்னும்