பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 2. திருமண விழாவில் விளக்குகள் ஏற்றப் படுகின்றன; மலரணி செய்யப்படுகிறது. 3. கல்லோரையில் திருமணம் நடைபெறும் மரபு நீடிக்கிறது. 4. திருமணத்திற்கு இளங்காலைபோது ஏற்ற போதாய்க் கருதப்படுகிறது. 5. மணமகள் புத்தாடை உடுத்தல். 6. மணவிழாவிற்கு வந்தோர்க்கு விருந்து செய்தல். 7. மணமனையை அழகுபடுத்தி கடவுள் வழி பாடு செய்தல், 8. காப்பு கட்டல், 9. மணமகளுக்கு மிகுந்த அணிகள் அணி வித்தல். 10. திருமணகாள் இரவிலேயே தலைமக்கள் கூடல். பழந்தமிழ்த் திருமணங்களில் தலைவன் பெற்ற சிறப்புகள் குறித்து ஏதும் அறிய இயலாமல் இருப் பது ஆடவர் வருந்தற்குரியது. அகநானூற்றுப் பாடல்கள் தரும் செய்திகளுள் ஆராயத் தக்கன : 1. மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட எரியோம்பித் தீவலம் செய்யாமை.