பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 QLil jiri-gy Gir Anacronism gTsärguib 357604, கருத்து வழு இருப்பினும் திருமங்கையார் காலத் தில் மணமானமைக்கு அறிகுறியாகக் கழுத்தில் (பின்னுளில் தாலியாகவும் பெயர் பெற்ற) நூல் அணியப்பெற்றமை வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பது வாய்மையாகும். திருமங்கை மன்னன் வழிப்பறி பற்றிய கதையிலும் தாலி வருவது நினைவுகூரத்தக்கது. இக்காலத்தும் தா லி யை *நூல் என்றும் கயிறு" என்றும் குறிக்கும் வழக்கு ஈண்டு மானிடவியல் அறிஞர் திரு. டி. ஜே. ஜெய தேவ் அவர்கள் தாலி பற்றி ஆங்கிலத்தில் எழுதி புள்ள கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. சங்க நூல்களிலும் இடைக்கால நூல்களிலும் அருங்கலம் என்ற ஒரு தொடர் வருகிறது. முலைவிலை' (களவியல் உரை - தஞ்சைவாணன் கோவை) என்ற தொடரும் இடைக்கால நூல்களில் இடம் பெறுகின்றன. இவை மானிடவியல் நூலார் குறிக்கும் Bride-Price பரிசம் எனலாம். அருங் கலம்’ என்பதும் தாலி ஆகாது என்பது தெளிவு. இப்போதும் திருமணத்தின்போது, மாப்பிள்ளை வீட்டார் மணமகளுக்கு ஏதேனும் ஒரு சிறப்பணி அணிவித்தல் பெருவழக்காய் இருத்தல் கருதத் தக்கது. சிலப்பதிகாரத் திருமணத்தால் நமக்குத் தெரியும் சிறந்த செய்தி மணமகன் வயது 16 மணமகள் வயது 12 ஆக இருந்தது என்பதே ஆகும். 2128–4