பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 இனி, 11-ஆம் நூற்றண்டுக் கச்சியப்ப சிவாச் சாரியார் செய்த கங்தபுராணத்துள் வரும் புதுக் குறிப்புகள் வருமாறு : 1. மணமகளாகிய உமையின் தாய் நீர் வார்க்கத் தந்தையான இமவான் மணமகனன சிவபெருமான் திருவடிகளை விளக்கினன், (இவ்வழக்கம் இப் பொழுது பிராமணர்களிடம் உள்ளது என்பர்.) 2. பின் உமையின் கையை மணமகன் கையில் வைத் துத் தாரைவார்த்துக் கொடுத்தான். 3. குறவர் கோமான் முருகன் கையில் வள்ளியின் கையை வைத்து, தாரைவார்த்துத் தந்தார், 4. நாரதர் புரோகிதராகவந்து வேத விதிப்படி எரிவளர்த்துச் சடங்குகள் செய்தார். 5. தெய்வயானையின் தந்தை இந்திரன் முருகனுக்குப் பாதபூஜை செய்தான், 6. பின்னர் இந்திரன் மணமகள் கையை முருகன் கையில் வைத்துத் தாரைவார்த்துக் கொடுத்தான்." 7. பிறகு நான்முகன் தன் கருத்தினுல் ஆக்கிக் கரத் தினுல் அளித்த மங்கலகாணே முருகன் தெய்வ யானைக்கு அளித்தான். (இவ்வழக்கங்கள் இப்போதும் உண்டு.) கந்தபுராணத்திலேயே திருக்குற்ருலப் படலத் தில் மங்கலகாண், பொற்ருலி என்றும் குறிக்கப்படு கிறது. எனவே, 8-ஆம் நூற்ருண்டில் நூலாக நுழைந்த ஒன்று 12-ஆம் நூற்ருண்டில் மங்கல காணுகவும் பொற்ருலியாகவும் புகழ் பெற்றுவிட் டது எனலாம்.