பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பெண்ணுே கடுவீட்டுத்தாலி கட்டும் வழக்கம் உள்ளது. உட்பிலியர் திருமணங்களில் காத்தி, சீர்க்காரி தாலி கட்டுவார். ஊராவியர், வலையர், வல்லம்பர், சலவைத் தொழிலாளர், குறும்பர் வகுப் பாருள் காத்தியே தாலி கட்டுவார். 6. தமிழ் உப்பிலியருள் கணவன் இறந்த பிறகும் விதவைகள் தாளுகத் தாலி விரும்பும்வரையில் தாலி அணிவர். வலியருள் விதவை தாலி நீக்கார். மறு மணம்செய்ய விரும்பினுல்தான் முதல் கணவன் கட்டிய தாலி நீக்கப்படும். இக்காலத்து மெய்வழிச் சபையாரும் கணவன் இறந்தபின் தாலி களைவது இல்லை. இம்முறை தாலி கட்டுவோர் அனைவராலும் போற்றிப் பின்பற்றத்தக்கது. தர்ஸ்டன் நூல் வாயிலாகப் பழங்குடி மக்கள் பலர் தாலிக்குப்பதில் 1. மின்னு 2. கரிய கண்ணுடி வளையல்கள் 3. பித்தளேக் காது வளையங்கள் 4. கரிய மணிகள் கோர்த்த கயிறு 5. பொன்மணி ஒன்றே கோர்த்த கயிறு 6. வலக்கையில் வெள்ளிக் காப்பு 7. காதணியும் காப்பு 8. மத்தள வடிவில் அல்லது பறைவடிவில் அமைந்த மாத்ரா 9. கொடி அல்லது வளையல் 10, பித்தளை மோதிரம் கோர்த்த கயிறு 11. தலைமயிரில் அல்லது பட்டு நூலில் இந்திரன் தலையைக்காட்டும அலிவிசேடம் 12. உங்த மின்னு அல்லது புவியிலை மின்னு முத லியனவற்றைத் திருமணச் சிறப்பு அணிகளாகக் கருதினர்.