பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ (1 Gy இனி, வைதிகத் திருமண முறைகள் செல்வாக் கிழக்கத் தொடங்கிய இருபதாம் நூற்ருண்டுச் செய்திகளைக் காண்போம். வைதிகத்திற்கு வந்த விபத்திற்கு முதல் பெருங்காரணம் இந்திய தேசிய விடுதலை இயக்கமே. இதையொட்டி எல்லாத் துறைகளிலும் ஏற்பட்ட புதிய சிந்தனைகள் காரண மாகப் பல செயல்கள்-எதிர்ச் செயல்கள் ஏற்பட் டன. அவற்றுள் இன்று இங்குகாம் கருதத்தக்கன இரண்டு : 1.மொழிவழி இனவுணர்ச்சி, 2. பகுத் தறிவு. இவ்விரண்டையும் பகுத்தறிவு என்ற ஒரே தலைப்பில் அடக்கலாம் என்பது என் கருத்து. இதன் பயனுகப் (!) பலருக்கும் புரியாத வடமொழி யில் மங்திரங்கள் ஓதுவதும், (2) சாதி வேற்றுமை பாராட்டுவதும், (3) பொருள் விளங்காச் சடங்கு களே நிகழ்த்துவதும் வெறுக்கப்பட்டது. இதன் விளைவாகவே நாட்டில் (1) தமிழ்த் திருமணங்கள், (2) திருந்திய திருமணங்கள் அல்லது சீர்திருத்தத் திருமணங்கள் அல்லது சுய மரியா ைத த் திருமணங்கள் கிகழலாயின. இம்மறுமலர்ச்சிக்கு வித்திட்டோர் திராவிடத் தங்தை பெரியார் ஈ. வே. ரா.வும், தனித்தமிழ்த் தங்தை மறைமலையடிகளாரும் எனலாம். இவ்விரு வருள் முன்னவர் தெய்வ கிந்தனை செய்பவர்; பின்னவர் தெய்வ வந்தனை செய்பவர். எனவே, இவ்விருவரும் வடமொழி ஒழிப்பு, பார்ப்பனப் புரோகித ஒழிப்பு ஆகிய இரண்டிலும் ஒருமை யுடையவர். ஆனல் முன்னவர் சமயச் சார்புக்கு