பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 எதிராக இராகு காலத்தில் திருமணம் செய்தல், தாலி கட்டாதிருத்தல் போன்றனவும் செய்தார். பின்னவர் காள், கோள் பார்த்துச் சமயச் சடங்குகள் சிலவற்றையேனும் தமிழ்வழி கடத்தத் தலைப்பட் டார். இவ்விரு பெருமக்களையும் பின்பற்றி ஏராள மான திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றுள்மிகப்பெரும்பாலானவைசொற்பொழிவுத் திருமணங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன. இப் போது கவியரங்கங்களும் கடக்கத் தொடங்கி யுள்ளன. விரைவில் பட்டிமன்றங்களும் நடை பெறலாம். இவற்றுள் சில கட்சிப் பிரசாரங்கட்கும் பயன்பட்டு வருகின்றன. சமய நம்பிக்கையுடைய தமிழ்த் திருமணங்களில் தெய்வத் தமிழ் முழங்கு கிறது. இனி இக் கட்டுரையை முடிக்குமுன் தொகுத் துக் கூறத் தக்கன: 1. சங்க காலத் திருமணம் இயற்கையையும் பகுத்தறிவையும் ஒட்டியது. 2. அதில் சாதி வேற் றுமை இல்லை. 3. குழங்தைத் திருமணமும் இல்லை. 4. வடமொழி மந்திர வழிபாடு இல்லை. 5. சங்க காலத்தில் இறுதி கிலையில் சிறப்பாகக் காப்பியக் காலத்தில்தான் ஆரிய முறைகள் ஆதிக்கம் பெற் றன. 6. அவை நாளடைவில் சிறப்பாக கம் நூற் ருண்டில் காட்டுப்புற மக்களின் வாழ்வையும் ஊடு. ருவத் தொடங்கியது. 7. தாலி கட்டும் முறை தமிழ ருடையதே. 8. இம்முறை கி. பி. எட்டாம் நூற் ருண்டிலிருந்து தமிழர் வாழ்வில் இடம் பெற்றிருக் கலாம். 9. தமிழர் திருமண முறைகளில் இரு